News

மாவனல்லை ஸாஹிரா கத்தார் கிளைக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரம்!

மாவனல்லை ஸாஹிரா கத்தார் கிளைக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரம்!

மாவனல்லை ஸாஹிரா கல்லாரியின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளை இலங்கை தூதரகத்தின் உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை திஸம்பர் மாதம் 02ஆம் திகதி கட்டார் நாட்டிற்கான இலங்கை தூதுவர் மாண்புமிகு திரு. பி.டி.பி.எஸ்.ஏ. லியனகே அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டது.

கட்டார் பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு. முகம்மத் லாfபிர், பொதுச் செயலாளர் திரு. அகமத் முனாப், உதவி பொருளாலர் திரு. மிfப்ரா ஹனிபா, நிர்வாக குழு உறுப்பினரான அப்துல் மலிக் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கட்டார் கிளை தலைவர் முகம்மத் லாfபிர் கருத்து தெரிவிக்கையில், இந்த அங்கீகாரமானது கட்டார் கிளையின் நீண்ட கால குறிக்கோளாக இருந்ததாகவும், கட்டார் தூதரகம் மற்றும் கட்டார்வாழ் இலங்கையின் இதர சமூக அமைப்புக்களுடன் மிக நெருங்கிய தொடர்புடன் செயல்பட விரும்புவதாகவும் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இலங்கை தூதுவரின் ஆதரவு மற்றும் வழிகாட்டல் தமக்கு மிகவும் பலத்தை அளிப்பதோடு, ஸ்டாபட் ஸ்ரீ லங்கன் பாடசாலை அதன் வளாகத்தை தமது பல்வேறு கூட்டங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் ஒதுக்கி தருவதை இட்டு நன்றிகளை தெறிவிப்பதாகவும் கூறினார். திரு முகம்மத் லாfபிர் அவர்கள் ஸ்டாபட் ஸ்ரீ லங்கன் பாடசாலையின் இயக்குனர் ஆகவும் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

ஸாஹிறா பழைய மாணவர் சங்க கட்டார் கிளையின் குறிக்கோள் ஆனது கட்டாரில் வாழும் பழைய மாணவர்களை அவர்களின் திறன் விருத்தி, பரஸ்பர நன்மை மற்றும் ஒத்துழைப்பின் ஊடாக ஒன்றினைத்து இஸ்லாமிய விழுமியன்களை பேணி பாடசாலையின் நீண்ட கால குறிக்கோள்களை அடைவதற்கான ஒரு பலம்வாய்ந்த சக்கதியாக தொழிற்படுவதாகும் என அவர் மேலும் கூறினார்.

கட்டார் பழைய மாணவர் சங்கம் ஸாஹிராவின் பழைய மாணவர் அமைப்பின் முதலாவது வெளிநாட்டு கிளை ஆகும். இது 2013 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதுடன் சுமார் 150 இற்கும் மேற்பட்ட அங்கத்தவர்களுடன் இயங்கி வருகிறது. கட்டார் கிளை ஸாஹிராவின் பழைய மாணவர் சங்கங்கள் மத்தியில் முன்மாதிரி கிளையாக செயற்படுவதோடு இந்த அங்கீகாரமானது அதன் நடவடிக்கைகளை மேலும் புதிய திசையில் தமது சக பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பக்கம் நகர்த்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல்,
திரு. முகம்மத் லாfபிர்
தலைவர்
ஸாஹிரா கல்லூரி, மாவனல்லை
பழைய மாணவர் சங்கம்
கத்தார் கிளை

பகிர்வு,
ஷம்ரான் நவாஸ் (துபாய்)

மேலும் முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.

உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top