இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் வருடத்தில் உலகின் மூன்றாவது பெரிய பள்ளிவாசல் ALGERIA வில் திறந்து வைக்கப்படவுள்ளது. Djamaa El Djazaïr என்று அழைக்கப்படும் இப் பள்ளிவாசலின் கட்டுமானப் பணிகள் அல்ஜீரியாவின் தலைநகரான Algiers யில் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது ‘உலகின் மூன்றாவது பெரிய பள்ளிவாசல்’ நிறைவுப் பணியை எட்டியுள்ளதால் 2019 ஆண்டில் இப் பள்ளிவாசலை திறந்து வைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இப் பள்ளிவாசலின் அமைப்பானது மத்தியகால இஸ்லாமிய அந்தலூஸியாவின் கட்டிடக்கலை அமைப்புடன் நவீன கட்டமைப்புடன் கலந்த அல்ஜீரியாவின் வரலாற்றுக்கு நெருக்கமான கட்டிடக்கலையினையும் தொடர்புபடுத்துவதாக அமைந்துள்ளது.
265 மீற்றர் உயரமுடைய இப் பள்ளிவாசலின் மினராவானது இரண்டு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. ஒன்று, நாட்டின் தலைநகரான Algiers யின் எப்பகுதியில் இருந்து பார்த்தாலும் இம் மினராவை கண்டுகொள்ள முடியும். அடுத்ததாக உலகில் மிக நீளமான மினரா என்ற பெயரையும் இப் பள்ளிவாசலின் மினரா பெற்றுக்கொண்டுள்ளது.
இப் பள்ளிவாசலின் கட்டுமானப் பணியில் 2,300 தொழிலாளர்கள் 24 மணித்தியாலய shifts அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பகல் நேரங்களில் பிரதான தொழுகை அறைகளுக்கு சூரிய வெளிச்சத்தின் ஒளியை பெறும் வகையில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதே போன்று மழைநீரும் பாரிய தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு பூமரங்களுக்கு பயன்படுத்தப்படும் அமைப்பில் இப் பள்ளிவாசலின் கட்டிடம் அமையப் பெறுகின்றது.
இப் பள்ளிவாசல் மாநாட்டு மண்டபம் உட்பட இஸ்லாமிய கலை-வரலாற்று அருங்காட்சியகம், ஆராய்ச்சி நிலையம், அல்குஆன் நிலையம், நூலகம், வர்த்தக நிலையங்கள், சிற்றுண்டிச் சாலையுடன் 7000 கார்களை நிறுத்தி வைப்பதற்கான நிலகீழ் வாகன நிறுத்துமிடத்தினையும் கொண்டமைந்துள்ளது.
மேலும் முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.
உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment