2016 ஆம் ஆண்டின் புள்ளிவிபர தகவல்களின் படி 3 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் மதுபாவனையால் இறப்பு என உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) அறிவித்துள்ளது. உலக மரணங்களில் 20 பேரில் ஒருவர் மதுபாவனையால் இறந்துள்ளனர் என்று WHO கடந்த வெள்ளிக்கிழமை (21.09.2018) அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த மதுபாவனையால் இறப்புக்களில் 3/4 பங்குக்கு மேலாக ஆண்கள் மரணமடைந்துள்ளதாக WHO குறிப்பிட்டுள்ளது. மேலும் அடுத்த 10 ஆண்டுகளில் சுகாதாரம் சம்பந்தமான பிரச்சினைகளில் மதுசாரத்தினால் ஏற்படப்போகும் அபாயகரமான நிலை ஒப்பீட்டளவில் அதிகரித்துக் காணப்படும் என WHO அச்சம் வெளியிட்டுள்ளது.
“மதுவும் – சுகாதார நிலையும் 2018” என்ற ஐ.நா வின் துணை நிறுவனமான WHO வின் செயலமர்விலேயே இவ் அறிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும் WHO குறிப்பிடும்போது, உலக அளவில் 237 மில்லியன் ஆண்களும் 46 மில்லியன் பெண்களும் மதுபாவனையால் நோய்வாய்ப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளே இந்த மது பாவனை சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அதிகம் முகம் கொடுக்கின்றன. அதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா இப் பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருகின்றது.
மது சம்பந்தப்பட்ட மரணங்களில் 28% ஆன இறப்புக்கள், விபத்துக்களினாலும் காயங்களினாலும் தனிப்பட்டவர்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறைகளினாலும் ஏற்படுகின்றது. 21% ஆன மரணங்கள் மதுபாவனையால் ஏற்பட்ட செரிமான கோளாறுகளினால் ஏற்படுகின்றன. 19% ஆன மரணங்கள் மதுபாவனையால் ஏற்படும் மாரடைப்பினாலும் நரம்பு வெடிப்பு மற்றும் பக்கவாதத்தினாலும் ஏற்படுகின்றது என WHO குறிப்பிட்டுள்ளது.
கணக்கெடுப்பின்படி ஒரு நாளைக்கு சராசரியாக உலகில் 2.3 Bபில்லியன் பேர் 33 கிராம் கலப்பற்ற Alcohol ஐ அருந்துகின்றனர் என WHO தெரிவித்துள்ளது.
உலக மொத்த மதுசார நுகர்வில் 10 வீதத்தினை கடந்த 2010 ஆம் ஆண்டில் இல் இருந்து ஐரோப்பா நுகர்ந்து வருகின்றது. தற்போதைய போக்கின் படி அடுத்து வரும் 10 ஆண்டுகளில் தென்கிழக்கு ஆசியா, மேற்கு பசிபிக், அமெரிக்கா போன்ற நாடுகள் மதுபாவனையால் இறப்பு உட்பட பல்வேறு நோய்களுக்கு முகம் கொடுக்கப் போகின்றது. எனவே இத்தகைய நாடுகள் மதுசாரப் பொருட்களுக்கும் அது சம்பந்தப்பட்ட விளம்பரங்களுக்கும் அதிக வரிகளை விதிப்பதன் மூலம் மதுப் பாவனையை மட்டுப்படுத்த முடியும் என WHO ஆலோசனை வழங்கியுள்ளது. உலக மது பாவனையில் 45 வீதம் Alcohol வகைகளையும் 34 வீதம் Beer வகைகளும் Wine 12 வீதமும் நுகரப்படுவதாக WHO அறிக்கை வெளியிட்டுள்ளது.
பெரும்பாலான நாடுகள் மதுப் பொருட்களுக்கான வரியினை ஒப்பீட்டளவில் உயர்த்தி வைத்துள்ளதன் காரணமாக, மதுப்பாவனையாளர்கள் மலிவான அதிக ஆபத்தான உள்நாட்டு சரக்குகளை சட்டத்திற்கு புறம்பாக நுகர்ந்தும் தயாரித்து விற்பனை செய்தும் வருகின்றமை இன்று உலக அளவில் சுகாதாரத்துறை எதிர்நோக்கும் பாரிய சவாலாகக் காணப்படுகின்றது.
மேலும் முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.
உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment