Muslim History

அமெரிக்காவில் உள்ள பலஸ்தீன் PLO அலுவலகத்தை இழுத்து மூடும் Trump நிர்வாகம்

பலஸ்தீன் PLO Mission
அமெரிக்காவில் உள்ள பலஸ்தீன் PLO அலுவலகத்தை இழுத்து மூடும் Trump நிர்வாகம்

அமெரிக்க ஜனாதிபதி Trump ன் நிர்வாகம், அமெரிக்காவின் Washington DC நகரில் அமைந்துள்ள பலஸ்தீனத்தின் வதிவிடப் பிரதிநிதி அலுவலகமான PLO Mission ஐ இழுத்து மூடியுள்ளது.

அமெரிக்காவின் நிர்வாகம் சம்பந்தப்பட்ட பேசவல்ல அதிகாரிகளில் ஒருவரான Heather Nauert குறிப்பிடும்போது, அமெரிக்காவின் அனுசரனையுடன் “இஸ்ரேலுடனான முன்னோட்டமான பேச்சுவார்த்தையை” பலஸ்தீன் நிராகரித்திருந்தது. இந்த பேச்சுவார்த்தை ஏற்பாடுகளை வெள்ளை மாளிகையின் ஆலோசகர் Jared Kushner இனால் முன்னின்று நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதே நேரம் இந்த Jared Kushner அமெரிக்க ஜனாதிபதியின் Trump ன் மருமகன் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். அமெரிக்க ஜனாதிபதியின் மருமகன் முன்னின்று ஏற்பாடு செய்து நடாத்தவிருந்த பேச்சுவார்த்தையை பலஸ்தீன் நிராகரித்தமையை அமெரிக்காவுக்கு ஜீரணித்துக்கொள்ள முடியாமல் போய்விட்டதும் ஒரு காரணமாகும்.

பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு வழங்காமல் சமாதானத்தையும் அமைதியையும் பலஸ்தீன் இல்லாமல் செய்கின்றது என்று அமெரிக்க நிர்வாகம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. அதே நேரம் யூத சார்பு அமெரிக்காவின் பேச்சுவார்த்தை மேசை எதை நோக்கி நகர்ந்து செல்லும் என்றும், தமது மக்கள் நாளாந்தம் கொன்று குவிக்கப்படுவதற்கும் விசாரணை நடாத்தப்படவேண்டும் என்றும் நியாயமான கேள்வியை பலஸ்தீன் எழுப்பியுள்ளது.

“PLO அமெரிக்காவின் சமாதானத் திட்டத்தை நிராகரித்துவிட்டது. அவர்கள் அமெரிக்காவின் சமாதானத்திற்கான ஆர்வத்தை புரிந்துகொள்ள தவறிவிட்டனர். இது அமெரிக்காவின் சட்டத்துறை மற்றும் நிர்வாகத்துறை என்பவற்றின் இயல்போடு சம்பந்தப்பட்ட விடயம் என்பதனால், Washington னில் உள்ள PLO அலுவலகத்தை மூடிவிட எமது நிர்வாகம் தீர்மானம் எடுத்தது.” என்று Heather Nauert குறிப்பிட்டார்.

Trump பின் தேசிய பாதுகாப்பு செயலாளர் John Bolton ஒரு விடயத்தை வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தார், அதாவது அமெரிக்காவையோ அல்லது இஸ்ரேலையோ ‘சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்’ (ICC) நிறுத்தி – அதற்கு ICC சட்ட நடவடிமுறையை மேற்கொள்ளுமானால், நாங்கள் அதனை கையாளத் தயாராக இருக்கின்றோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

“நாங்கள் ICC உடன் ஒத்துழைக்கப் போவதில்லை. ICC க்கு வழங்கும் உதவித் தொகையையும் நாங்கள் செலுத்தப்போவதில்லை. நாங்கள் ICC உடன் இணையப் போவதில்லை. ICC அழிந்து போகட்டும் என்று நாங்கள் கைவிட்டு விட்டோம். எங்களைப் பொறுத்தவரைக்கும் ICC ஏற்கெனவே அழிந்துவிட்ட ஒன்றாகும்.” என மிகவும் அச்சுறுத்தும் வகையில் John Bolton குறிப்பிட்டிருந்தார்.

உலகப் பொலிஸ்காரனாக தன்னைக் காட்டிக்கொள்ளும் அமெரிக்கா, இவ்வாறு கூறியிருப்பது முழு உலகுக்குமான அச்சுறுத்தலாகும். ஐ.நா வின் துணை நிறுவனமான ICC க்கு இவ்வாறான அச்சுறுத்தலை விட்டிருப்பது, நாங்கள் எதைச் செய்தாலும் அல்லது செய்வித்தாலும் அதனை யாரும் தட்டிக் கேட்டுவிடக்கூடாது என்று மிரட்டுவதைப் போல் உள்ளது.

கடந்த வருடம் International Criminal Court (ICC) இல், போர்க் குற்றவாளியான இஸ்ரேலை விசாரிக்குமாறு பலஸ்தீன் தலைவர் Mahmoud Abbas கோரியிருந்தார். அப்போதே Washington இல் உள்ள PLO அலுவலகத்தை மூடிவிட அமெரிக்கா விரும்பியது. அதே நேரம் பலஸ்தீன்-இஸ்ரேல் ஆகிய நாடுகளை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவந்து ICC இல் Mahmoud Abbas முன்வைத்த கோரிக்கையை கிடப்பில் போடலாம் என அமெரிக்கா எதிர்பார்த்திருந்தது. அது கைகூடாமல் போனதன் விளைவுதான் PLO வெளியேற்றப்பட்டதன் பின்னணியாகும்.

ஐ.நா வின் துணை நிறுவனமான UNRW (United Nations Relief and Works Agency for Palestine Refugees) க்கு அமெரிக்கா வழங்கிய நிதி உதவியையும் Trump நிர்வாகம் நிறுத்தியுள்ளது. இவற்றுக்கெல்லாம் ஒரே காரணம்
??

பலஸ்தீன் PLO Mission

மேலும் முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.

உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top