Muslim History

கனடா நீதிமன்றத்தை ஆச்சரியப்படுத்திய 18 வயது முஸ்லிம் பெண்.

Noor Fadel
கனடா நீதிமன்றத்தை ஆச்சரியப்படுத்திய 18 வயது முஸ்லிம் பெண்.

கடந்த வருடம் கனடாவில் இளம் முஸ்லிம் பெண்ணொருவர் புகையிரதத்தில் இன ரீதியான தாக்குதலுக்கு உட்பட்டிருந்தார். தற்போது தன்னை இனரீதியாக தாக்கிய அந்த எதிராளியை நீதிமன்றத்தில் வைத்து மன்னிப்புக் கொடுத்திருக்கின்றார்.

“நான் உங்களை மன்னிக்கிறேன். ஏனெனில் நான் வளர்ந்துவிட்டேன், உலகத்தை மாற்ற ஆரம்பித்திருக்கும் ஒரு நபராக என்னைக் கருதுகிறேன்.” என 18 வயது நிரம்பிய Noor Fadel என்ற முஸ்லிம் யுவதி, தன்னைத் தாக்கிய நபரிடம் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம் December 6ஆந் திகதி Noor Fadel கனடா Waterfront Station இல் புகையிரதத்தில் இருக்கும்போது, இனரீதியான தகாத வார்த்தைகளினால் உரத்த அச்சமூட்டும் குரலில் நபரொருவர் தாக்குதல் தொடுத்திருந்தார். மேலும் முஸ்லிம்கள் அனைவரையும் கொன்றுவிட விரும்புவதாகவும் அவ்விடத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு Noor Fadel லின் ஹிஜாப்பையும் அகற்றுவதற்கு முயற்சித்த நபர், 47 வயதுடைய Pierre Belzan என பின்னர் CCTV மூலம் அடையாளம் காணப்பட்டு, அவர்மீது வழக்குப் பதியப்பட்டிருந்தது.

இந் நிலையில் புதன்கிழமை (05.09.2018) குறிப்பிட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே Noor Fadel தனது எதிராளியை மன்னிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.

உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top