Gaza பலஸ்தீனின் சுறுசுறுப்பான நகரம். பொழுது புலர்வதும் சூரியன் மறைவதும் குண்டுத்தாக்குதலின் ஓசையோடுதான். தாக்குதலை நடாத்துபவர்கள் வேறு யாரும் அல்ல – பயங்கரவாத அரசு..
யார் அந்தப் பயங்கரவாத அரசு ?! என்பது உலகம் அறியாத பதிலல்ல. சுருக்கமாக ஒரே வார்த்தையில் சொல்வதானால், சொந்த நாட்டுப் பலஸ்தீன் மக்களையே அகதிகளாக்கி, ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கிய ஆக்கிரமிப்பாளர்கள்.
ஆக்கிரமிப்பு, நில அபகரிப்பு, கொலை, குண்டுத்தாக்குதல், உளவியல் தாக்குதல், கைது செய்து சித்திரவதை செய்தல், குழந்தைகளையும் கொன்று குவித்தல்… இவை போன்ற அத்தனையையும் சுதந்திர பலஸ்தீன் மீது இஸ்ரேல் நாளாந்த நிகழ்ச்சி நிரலாகக் கொண்டுள்ளது.
Gaza வில் அமையப் பெற்றுள்ள கலாச்சார மத்திய நிலையத்தினையும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் மூலம் நிர்மூலமாக்கியுள்ளது. இதனால் இஸ்ரேல் எதிர்பார்ப்பது என்ன ?
தமது உணர்வுகளை வெளிப்படுத்தும் களமாக, தமது ஆளுமைகளை போசிக்கும் ஒரு களமாகவே, ஒட்டு மொத்த இலக்கிய வெளிப்பாடாகவே அவ் மத்திய நிலையம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இத்தகைய ஒரு களத்தினை இஸ்ரேல் நிர்மூலமாக்கியிருப்பதன் மூலம், எத்தகைய ஒரு புலத்தினையும் பலஸ்தீனுக்காக விட்டு வைக்கக் கூடாது என்பது இஸ்ரேலின் எதிர்பார்ப்பு ஆகும். ஆனால் இவை எல்லாம் ஏதோ ஒன்றுக்கான ஒரு விதைப்பு என்பதை அவர்கள் உணர மறந்து விட்டனர்.