Muslim History

70 இலட்சத்திற்கு மேற்பட்ட ஆப்கான் சிறுவர்கள் பசியில் …

Afghan
70 இலட்சத்திற்கு மேற்பட்ட ஆப்கான் சிறுவர்கள் பசியில் ...

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நாட்டில் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதால், 70 இலட்சத்திற்கு மேற்பட்ட ஆப்கான் சிறுவர்கள் பசிக்கு ஆளாக நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Save the Children அமைப்பே 70 இலட்சத்திற்கு மேற்பட்ட ஆப்கான் சிறுவர்கள் பசிக்கு ஆளாக நேரிடும் என்ற இவ் எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மேலும் அவ் அறிக்கையானது,

குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தப் போதுமான தினசரி ஊட்டச்சத்துக்கள் தேவைப்படும் இக் காலகட்டத்தில், உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனா தொற்றுநோய்க்கு முன்பே, ஐந்து மில்லியனுக்கும் அதிகமான ஆப்கான் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை என்று மதிப்பிடப்பட்டிருந்தமையையும் Save the Children அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதே நேரம் UN னின் சமீபத்திய ஆய்வுகள், ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் இரண்டு மில்லியன் ஆப்கான் குழந்தைகள் கடுமையான பட்டினியை எதிர்நோக்கியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் முக்கிய நகர சந்தைகளில் கோதுமை மா மற்றும் சமையல் எண்ணெயின் விலைகள் கடந்த மாதத்தில் 23 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என்று உலக உணவுத் திட்டத்தின் (World Food Programme – WFP) புள்ளிவிபரங்கள், இவ் அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

அரிசி, சீனி மற்றும் பருப்பு வகைகளின் விலைகள் 7 வீதத்தில் இருந்து 12 வீதம் வரை அதிகரித்துள்ளன.

ஆப்கானிஸ்தான் பணியாளர்களில் பெரும் பகுதியினர் (முறைசாரா) நாற்கூலிகளாகவே இருந்து வருகின்றனர்.

வேலையின்மை பரவலாகக் காணப்படும் இச் சந்தர்ப்பத்தில் கொரோனாவிற்கான பாதுகாப்பு உடைகளும் தொழிலாளர்களிடத்தில் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,000 பேருக்கு வெறும் 0.3 மருத்துவர்கள் மட்டுமே ஆப்கானிஸ்தானில் இருப்பதால், நோய்வாய்ப்பட்ட மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் உயிர் காக்கும் சிகிச்சையைப் பெறும் சாத்தியம் மிக மிகக் குறைவு என்றும் Save the Children எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கொரோனா நோய்த் தொற்று மற்றும் இறப்புக்களுக்கு உலகம் இப்போதே நடவடிக்கை எடுக்காவிட்டால் பட்டினி, நோய் மற்றும் இறப்பு ஆகியவற்றுக்கு கடுமையாக முகம்கொடுக்க வேண்டிவரும் என கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் lockdown முடக்கம் காணப்படுகின்ற நிலையில் உணவு விநியோக விடயங்களை விரைவு படுத்தும்படி ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top