ரெயில்வே துறையில் பெண் ரெயில் ஓட்டுநர் (Loco pilot) பதவிக்காக கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கு அமைய, 28,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. இதில் 30 பெண்கள், ரெயில் ஓட்டுநர் (Loco pilot) பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந் நிகழ்வு சவூதி ரெயில்வே துறையில் ஏற்பட்டுள்ளது.
“Online மூலம் பெண்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியிருந்தோம். கிடைக்கப்பெற்ற 28,000 விண்ணப்பங்களில், கல்வித் தராதரம் மற்றும் English Knowledge ஆகியவற்றின் அடிப்படையில் அரைவாசிப்பேரை தேர்ந்தெடுத்து, அதிலிருந்து 30 பேரை இறுதியாக பயிற்சியாளர்களாக தேர்ந்தெடுத்துள்ளோம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 30 பெண் ரெயில் ஓட்டுநர்களும், (Loco pilot) மக்கா – மதீனா நகரங்களுக்கிடையிலான Bullet Train களில் ஒரு வருடகாலத்திற்கு பயிற்சிக்காக அமர்த்தப்படுவர்.” என்று Spanish நாட்டவரான Railway Operator – Renfe குறிப்பிட்டார்.
சவூதி, பெண்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதில் ஆர்வமாக இருப்பதாக Renfe மேலும் குறிப்பிட்டார்.
தற்போது சவூதி அரேபியா ரெயில்வே துறையில் 80 ஆண் ரெயில் ஓட்டுநர்கள் (Loco pilot) பணிபுரிவதோடு, மேலும் 50 பேர் பணியிடங்கள் வழங்கப்படுவதற்கு தயார்நிலையில் உள்ளனர்.
மருத்துவம் மற்றும் கல்வித்துறைகளில் மாத்திரமே பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் சவூதியில் காணப்பட்டன. தற்போது சகல துறைகளிலும் பெண்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.