35 வயதையுடைய பிரிட்டிஷ் முஸ்லிம் பெண்மணி ஒருவர் அமெரிக்காவில் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது தனது ஆடையில் தீ வைக்கப் பட்டுள்ளதை உணர்ந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை இந்த தீவைப்புச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
New York போலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து CCTV கமெராக்களை ஆராய்ந்த போலீஸார், இச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கும் நபர் ஒருவரின் புகைப்படத்தினை பொது மக்களின் உதவியை நாடி வெளியிட்டு வைத்துள்ளது.