2018 ஆம் ஆண்டு ஹஜ் பயணிகளுக்காக முதன் முறையாக தன்னார்வ நிறுவனம் ஒன்று புதுவித முயற்சியில் இறங்கியுள்ளது.
ஹஜ் எனும் வணக்க வழிபாட்டினை மேற்கொள்ள செல்லுபவர்களுக்கும், சுற்றுலா பிரயாணம் மேற்கொள்பவர்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் ஒவ்வொருவரினதும் இலக்கு இஸ்லாத்தின் கடமையை நிறைவேற்றுவதாகும். பெரும்பாலான நேரங்களை வணக்க வழிபாட்டிலேயே கழிப்பர். தூங்கும் நேரத்தில் ஓரளவுக்கு சற்று வசதியான இடம் கிடைத்தால் போதும். இத்தகையவற்றினைக் கருத்தில் கொண்டு ஒரு தன்னார்வ நிறுவனம், நடமாடும் mini hotel room களை உருவாக்கியுள்ளது.
இந்த நடமாடும் படுக்கையறை 220cm நீளமும், 120cm உயர, அகலங்களைக் கொண்டது. இவ் படுக்கையறை plastic மற்றும் fiberglass னால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த mini படுக்கை அறையினைப் பயன்படுத்துபவர்களுக்குப் புறம்பாக குளியல் அறை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டம் ஹஜ், உம்றா காலங்களில் மேலும் விஸ்தரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.