பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியிருந்தது.
இந்தத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ), ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்), முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ மகன் பிலவல் புட்டோ ஜர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி), மதவாத கட்சிகளை உள்ளடக்கிய முத்தாஹிதா மஜ்லிஸ்-இ-அமால் (எம்எம்ஏ) கூட்டணி, அவாமி தேசிய கட்சி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் போட்டியிட்டன.
இதன் மூலம் 30 ஆண்டுளாக கோலோச்சி வந்த நவாஸ் ஷெரீப் மற்றும் புட்டோ குடும்பம் இல்லாத புதிய நபர் தலைமை பொறுப்புக்கு வருகிறார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தம் 342 இடங்கள் உள்ளன. இதில் 272 பேர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதில் 137 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் கட்சி ஆட்சியமைக்க முடியும். மீதம் உள்ள 60 இடங்கள் பெண்களுக்கும், 10 இடங்கள் மத சிறுபான்மையினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் நியமிக்கப் படுவார்கள்.
பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீஃப்-ஏ-இன்சாஃப் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இருந்தாலும் தனித்து ஆட்சி அமைப்பதற்கு போதுமான அளவினை இம்ரான் கானின் கட்சி பெற்றிருக்கவில்லை. அவ்வாறு ஆட்சி அமைப்பதற்கு சுமார் 37 நியமன உறுப்பினர்களின் ஆதரவினை இம்ரான் கான் பெற்றுக்கொள்ளக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இவ் வெற்றி குறித்து இம்ரான் கான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “என்னுடைய 22 ஆண்டுகால போராட்டத்தில் இன்று வெற்றிபெற்றுள்ளேன். என்னுடைய வேண்டுதல்களுக்கும் இன்று பதில் கிடைத்துவிட்டது. இதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எனது கனவு நினைவாக்கும் நாள் பிறந்துவிட்டது” என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
1952, அக்டோபர் 5ல் பாகிஸ்தானின் லாகூரில், பாகிஸ்தான் குடும்பத்தில் பிறந்தவர்தான் இம்ரான் கான். பிறக்கும் போதே கோடிகளில் புரண்ட குடும்பம் அவரது குடும்பம். வியாபாரம், வர்த்தகம் என்று பல நிலைகளில் அவரது குடும்பத்திற்கு வருமானம் வந்தது. சாதாரண மக்களிடம் இருந்து விலகி மிகவும் பணக்காரராக வாழ்க்கையை தொடங்கினார் இம்ரான் கான்.
சிறு வயதிலேயே ஆங்கிலம் மீது மோகம் வந்து ஆங்கில வழி கல்வியில் படித்தார். அதன்பின் இங்கிலாந்து சென்று தனியாக ஆங்கிலம் படித்தார். அதன்பின் ஆக்ஸ்போர்ட் பல்கலையின் கேபெல் கல்லூரியில் சேர்ந்து பொருளாதரம், அரசியல், தத்துவம் ஆகியவை படித்தார். ஆனால் கிரிக்கெட்டை சிறுவயதில் விளையாடியவர், அதன்பின் விளையாடாமல் விட்டுவிட்டார்.
மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பி தேசிய அணியில் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி சேர்ந்தார். 1971ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியில் சேர்ந்தார். கூடிய சீக்கிரத்தில் பாகிஸ்தான் அணியின் முக்கியமான ஆல்ரவுண்டராக மாறினார். 1982ல் அணியின் கேப்டனாக மாறினார். ஆனால் 1987ல் அணியில் இருந்து ஓய்வை அறிவித்து பின் ராணுவ ஜெனரலின் கோரிக்கையை அடுத்து 1988ல் மீண்டும் அணிக்கு வந்தார்.
1992ல் நியூசிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் நடந்த உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானின் இளம் அணிக்கு தலைமை தாங்கி விளையாடினார் இம்ரான் கான். பாகிஸ்தான் அணி வோலிங்கை மட்டும் வைத்துகொண்டு இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றது. இறுதி போட்டியில் வலுவான இங்கிலாந்தை இம்ரான் படை அடித்து ஓட விட்டு பாகிஸ்தானுக்கு முதல் உலகக் கோப்பையை வாங்கி கொடுத்தது. அதே கோப்பை அவருக்கு அரசியல் ஆசையை விதைத்தது.
உலகக் கோப்பை போட்டிக்கு ஒரு வருடத்திற்கு முன்புதான் அவர் தனது அம்மாவை பறிகொடுத்தார். கேன்சரால் இறந்த அம்மாவின் பெயரிலேயே சாஹுத் கனம் என்று புற்றுநோய் மறுவாழ்வு மையத்தை தொடங்கினார். சில வருடத்திலேயே லாகூரில் முதல் கேன்சர் மருத்துவமனையை ஏற்படுத்தினார். பின் பெஷாவரில் இரண்டாவது மருத்துவமனையை உருவாக்கினார். மக்கள் முன்னிலையில் தலைவராக மாறினார்.
1997ல் நீதிக்கான இயக்கம் என்ற பொருள்படும் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை தொடங்கினார். 2002 எம்.பியாக தேர்வானார். கொஞ்சம் கொஞ்சமாக இவர் கட்சியும் வளர்ந்தது. 2013 தேர்தலில் ஆளும்கட்சிக்கு எதிராக கடுமையான பிரச்சாரம் செய்து முக்கிய அரசியல் முகமாக மாறினார்.
1997ல் இருந்து 2013 வரை அவரது அரசியல் பயணம் பெரிய வெற்றிப்பயணம் இல்லை என்றுதான் கூறவேண்டும். வரிசையாக தோல்வியை தழுவிக் கொண்டே வந்தார். அரசியலில் பிரபலம் ஆனாலும் எப்போதும் ஆளும் கட்சி, பூட்டோவின் எதிர்கட்சிக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்திலேயே இருந்தது அவரது கட்சி. அவரது பிரதமர் கனவு அவரது கிரிக்கெட் பேட்டுடன் அறைக்குள் தூங்கி கொண்டு இருந்தது.
2013 தேர்தலுக்கு பின் அவர் பின்வாங்கவில்லை. பூட்டோவின் கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்கு தள்ளி தன்னை எதிர்க்கட்சியாக பிரகடனப்படுத்திக் கொண்டார். தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் பெயரை மக்கள் மத்தியில் கொண்டு சென்றார்.
1995-ல் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெமிலா கோல்ட்ஸ்மித் என்ற தனது கல்லூரி கால காதலியை திருமணம் செய்தார். 9 வருடத்துக்குப் பின் அவரை விவாகரத்து செய்தார். அதற்கு அடுத்து ரேஹாம் கான் என்ற தொகுப்பாளரை 2015ல் மணந்தார். 10 மாதத்திலேயே அவரை விவாகரத்து செய்தார். அதன்பின் 2017 பிப்ரவரி மாதம் மூன்றாவதாக திருமணம் செய்தார். புஷ்ரா மேனகா அந்த பெண்ணுடனும் இப்போது அவர் வாழவில்லை.
இந்த நிலையில் அவரை குறித்த திரைப்படம் ஒன்று வர இருக்கிறது. காப்டன் என்ற பெயரில் இந்த படம் வெளியாக இருக்கிறது. டிரைலர் வெளியாகி இன்னும் படம் வெளியாகாமல் இருக்கிறது. இவரின் தற்போதையை வெற்றியை கொண்டாடும் வகையில் படம் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.
மேலும் இதுபோன்ற செய்திகளையும், முஸ்லிம் உலகின் வரலாற்றினையும் பெற்றுக்கொள்ள எமது Facebook Page ஐ like செய்யுங்கள்