கடல் மட்டத்தில் இருந்து 3200 மீற்றர் உயரத்தில், தவழ்ந்து வரும் மேககங்களின் மத்தியில் அமையப் பெற்ற ஒரு பள்ளிவாசலே இது. துருக்கியின் வட கருங் கடல் மாகாணத்தில் கண்ணைக் கவரும் விதத்தில் இப்பள்ளிவாசல் அமைந்துள்ளது.
Kirklar பள்ளிவாசல் என இப்பள்ளிவாசல் அழைக்கப்படுகின்றது. துருக்கியின் Bayburt மற்றும் Trabzon ஆகிய பிராந்தியங்களுக்கு இடையில் இப் பள்ளிவாசல் காணப்படுகின்றது. இயற்கை ரம்மியமான சூழலில் அமையப் பெற்ற இப் பள்ளிவாசல் எப்பொழுதும் பனிமூட்டத்தினாலும் மேகங்களினாலும் நிறைந்து காணப்படும்.
மலையின் உச்சியில் காணப்படும் இப்பள்ளிவாசல் மக்கள் வசிக்கும் இடத்தில் இருந்து தூரத்தில் காணப்படுவதன் காரணமாக எப்போதும் சனசஞ்சாரமற்ற ஒரு பிரதேசமாகவே காணப்படும். தனிமையை விரும்பி பூரண உள்ளுணர்வுடன் வணக்கத்தில் ஈடுபடுவதற்கு இப்பள்ளிவாசல் பொருத்தமான இடமாகும்.
மேலும் இதுபோன்ற முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.
உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. கருத்துகளை பதிய கீழே கிளிக் செய்யவும்