இந்திய ஹஜ் வாரியம் 2019 ஆம் ஆண்டுக்கான மாநில ரீதியான ஹஜ் கோட்டாவை அறிவித்துள்ளது. மாநில அளவில் காணப்படும் முஸ்லிம்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப, ஹஜ் கோட்டாக்கள் பங்கீடு செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் வருடம்(2019) சவூதி 175,025 கோட்டாக்களை இந்திய முஸ்லிம்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக வழங்கி இருக்கின்றது. இந்திய முஸ்லிம்களின் ஹஜ் சம்பந்தப்பட்ட விடயங்களை கையாளும் இந்திய ஹஜ் வாரியத்தின் ஊடாக 125,025 கோட்டாக்கள் வழங்கப்படும் அதேவேளை மீதமுள்ள 50,000 கோட்டாக்கள் தனியார் பயண இயக்குநர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2011 ஆண்டின் முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப மாநில அளவில் மேற்குறிப்பிட்ட ஹஜ் கோட்டாக்களை, இந்திய ஹஜ் வாரியம் பங்கீடு செய்துள்ளது.
Jammu & Kashmir பகுதிக்கு சவூதி அரசாங்கத்தால் விசேடமான கோட்டாக்கள் 2000 ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தபோதும், விசேட கோட்டாக்களுக்கான விண்ணப்பங்கள் 500 ற்கும் குறைவாகவே கோரப்பட்டிருந்தன; அல்லது விசேட கோட்டாக்களை பெறுவதற்குரிய நிபந்தனைகளுக்கு உட்பட்டிருக்கவில்லை. (உ+தா : பிரதேசத்தில் நிகழும் வன்முறையில் பாதிப்பு…) இதே நேரம் மஹ்ரம் இல்லாமல் செல்லும் பெண்களுக்கு என்று முழு இந்தியா அளவில் 2,340 கோட்டாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. இதில் 61பேர் மேற்கூறிய அடிப்படையில் Jammu & Kashmir இல் இருந்து ஹஜ்ஜுக்காக இம்முறை செல்லவுள்ளனர்.
இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றும் எதிர்பார்ப்புடன் 267,261 விண்ணப்பங்கள் முழு இந்திய அளவில் கிடைக்கப்பெற்றிருந்தன. கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ் வருடம் ஹஜ் செல்வதற்கென கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் மிகவும் குறைவாகவே காணப்பட்டன. என்றாலும் சவூதி அரசாங்கத்தால் இந்தியாவிற்கு வழங்கப்பட்ட கோட்டாவின் இரு மடங்கு விண்ணப்பங்கள் இம்முறை ஹஜ் செல்வதற்காக கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இவ் வருடத்திற்கான ஹஜ் கோட்டாவை 20,000 ஆல் அதிகரித்துத் தரும்படி சவூதி அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
Jammu & Kashmir க்கு என வழங்கப்படும் விசேட கோட்டா தவிர்ந்து, வழமையான கோட்டாவினைக்கோரி 22,389 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றிருந்தன. என்றாலும் 6,163 கோட்டாக்களே சனத்தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப Jammu & Kashmir க்கு இவ்வருடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் Lakshadeep க்கு 297 விசேட ஹஜ் கோட்டாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் 342 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. 45 விண்ணப்பங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட கோட்டாக்களை விட மேலதிகமாகும்.
Uttar Pradesh இன் முஸ்லிம்களின் சனத்தொகை 3,84,83,967 ஆகும். இதன் அடிப்படையில் 30,237 கோட்டாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஹஜ்ஜினை மேற்கொள்வதற்காக வேண்டி 34,397 விண்ணப்பங்கள் ஹஜ் வாரியத்திற்கு கிடைக்கப்பெற்றிருந்தது.
West Bengal இன் முஸ்லிம்களின் சனத்தொகை 2,64,54,825 ஆகும். இதன் அடிப்படையில் 17,735 கோட்டாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் 8,470 ஆகும்.
Bihar இன் முஸ்லிம்களின் சனத்தொகை 1,75,57,809 ஆகும். இதன் அடிப்படையில் 12,630 கோட்டாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் 4,950 ஆகும்.
Assam இன் முஸ்லிம்களின் சனத்தொகை 1,09,10,451 ஆகும். இதன் அடிப்படையில் 7,848 கோட்டாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் 3,588 ஆகும்.
ஒதுக்கீடு செய்யப்பட்ட கோட்டாக்களை விட விண்ணப்பங்கள் குறைவாக கிடைக்கப்பெற்ற மாநிலங்களின் எஞ்சிய கோட்டாக்கள் ஏனைய மாநிலங்களுக்கு விகிதாசார அடிப்படையில் பகிர்தளிக்கப்பட்டதாக ஹஜ் வாரியம் குறிப்பிட்டுள்ளது.
Jharkhand, Punjab, Tripura ஆகிய மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கோட்டாக்களை விட குறைவான விண்ணப்பங்களே கிடைக்கப் பெற்றிருந்தது.
Maharashtra வின் முஸ்லிம்களின் சனத்தொகை 1,29,71,152 ஆகும். இதன் அடிப்படையில் 11,907 கோட்டாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் 35,658 ஆகும்.
Maharashtra வின் முஸ்லிம்களின் சனத்தொகை 88,73,472 ஆகும். இதன் அடிப்படையில் 11,472 கோட்டாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் 43,115 ஆகும்.
இதேவேளை தமிழ்நாட்டில் இருந்து 2019 ம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள 6379 பேர் விண்ணப்பித்துள்ளதாக ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.
மேலும் இதுபோன்ற முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள். இதே போன்று உங்கள் ஊர் சம்பந்தப்பட்ட முதன்மைகளையும் விடயங்களையும் நிகழ்வுமேடையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment