சவூதி அரேபியாவின் உணவு மற்றும் மருந்து அதிகாரசபை, மதீனா நகரில் 21 டன்னுக்கும் அதிகமான உணவுப் பொருட்களைக் கைப்பற்றியுள்ளது. பழுதடைந்த, காலாவதியான மற்றும் உரிமம் பெற்றுக்கொள்ளாத உணவு வகைகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
முறையாக பொதியிடப்படாமல் தூசி படிந்த மற்றும் பூச்சி புழுக்கள் காணப்பட்ட உணவு வகைகளும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, சவூதி அரேபியாவின் உணவு மற்றும் மருந்து அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
உணவுப்பொருட்களை வினியோகம் செய்பவர்களும் அவற்றினை களஞ்சியப்படுத்துபவர்களும் அதற்காக முறையான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிக்கும் முகமாக link : visit https://ghad.sfda.gov.sa/en. ஒன்றையும் அதிகார சபை வெளியிட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற நுகர்வோரின் உரிமை மீறல்களை வெளிப்படுத்துவதற்காக 19999 என்ற Hot line இலக்கத்தையும் Tammini என்ற app ஐயும் சவூதி அரேபியாவின் உணவு மற்றும் மருந்து அதிகாரசபை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது.