ஈராக் – நன்கு புரியப்பட்ட ஒரு தேசம். 20 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி ஈராக்கைப் பற்றி எமது மனதில் கற்பித்தவைகள், ஈராக்கின் சின்னாபின்னத்தையே!
1990 August 2, ஈராக் குவைத் மீது போர்தொடுத்தது. இதனைத் தொடர்ந்து ஈராக்கை அழிவு பற்றிக் கொண்டது.
இன்றைய ஈராக்கின் தலைநகரான பக்தாத், பண்டைய இஸ்லாமிய கலையினதும், அறிவியலினதும் தலைப்பட்டினமாகும்.
குவைத் மீதான ஈராக்கின் முற்றுகையைத் தொடர்ந்து, மேற்கத்திய வல்லரசுகளால் ஈராக்கும் சதாம் ஹுசைனும் குறிவைக்கப்பட்டனர். அதன் பின்னர் ஈராக் துவம்சம் செய்யப்பட்ட கதை அனைவரும் அறிந்த விடயமாகும்.
எவ்வாறு ஜப்பானின் ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டின் கதிர்வீச்சுத் தாக்கங்கள் இன்றுவரை ஜப்பானியரை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றதோ, அதேபோன்று ஈராக்கின் மீதான வல்லரசுகளின் அத்துமீறல்கள் பொருளாதார ரீதியில் இன்றுவரை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது.
ஈராக்கின் Mosul நகரில் மட்டும் 3,000 க்கும் அதிகமான போரினால் பெற்றோரை இழந்த சிறுவர்கள் வாழ்ந்து வாருகின்றனர்.
அங்கு வாழும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சோகக் கதையினை தம்முள் சுமந்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.
Sana Ibrahim என்ற 61 வயதுடைய மூதாட்டியும் நாளாந்தம் பொருளாதாரப் போருக்கு முகம்கொடுத்து வருகின்றார். தமது 5 பிள்ளைகளின் குடும்பங்களின் 22 பேரக்குழந்தைகளை தனித்து நின்று பராமரித்து வருகின்றார். தமக்குப் பிறந்த ஐவரும் திருமணம் செய்தபின் அவர்கள் கடத்தப்பட்டும் கொல்லப்பட்டும் விட்டனர். அவர்களில் யாராவது உயிருடன் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் இன்றுவரை காத்திருக்கிறார் Sana Ibrahim.
“நாங்கள் உயிர்வாழ்ந்து கொண்டிருப்பது, தன்னார்வ அமைப்புக்களின் உதவியினால்தான், அல்லாவிட்டால் நாங்கள் என்றோ பட்டினியினாலும் நோயினாலும் இறந்திருப்போம்.” என்று Sana Ibrahim குறிப்பிடுகின்றார்.
71 வயதான Sana வின் கணவரும் Alzheimer நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார். இவரையும் பராமரிக்கவேண்டிய பொறுப்பும் Sana வுக்கு காணப்படுகின்றது.
போரினால் தமது வீடு அழிக்கப்பட்டபோது, தமக்குரிய இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளவேண்டிய சவால் ஏனைய பெரும்பாலான ஈராக்கியரைப் போன்று Sana அம்மையாருக்கு ஏற்பட்டது. தற்போது Sana அம்மையாரின் குடும்பத்தினர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
இவ்வாறு ஈராக்கில் போரின் வடுவினால் பாதிக்கப்பட்டு வாழ்க்கைப் போர்க்களத்தில் போராடும் பலர் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் Sana Ibrahim என்ற மூதாட்டியாவார்.
மேலும் முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.
உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment.