Muslim History

பலஸ்தீனின் கொடிக்கு எதிரான சட்டமூலம்

பலஸ்தீனின் கொடி
பலஸ்தீனின் கொடிக்கு எதிரான சட்டமூலம்

தேசியக் கொடி என்பது ஒவ்வொரு நாட்டினதும் அடையாளச் சின்னமாகும். பலஸ்தீனைப் பொறுத்தவரையில் அது உயிர்நாடியாகும்.

இத்தகைய பலஸ்தீன மக்களின் உணர்வுகளுடன் கலந்துவிட்ட தொப்புள் கொடியை சட்டமூலம் ஒன்றினை நிறைவேற்றுவதன் மூலம் தடைசெய்வதற்கு முஸ்தீபுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Likud Anat Berko என்ற இஸ்ரேல் சட்டசபை உறுப்பினரே இந்த சட்டமூலத்தின் முன்மொழிவினை சட்டசபையில் கொண்டுவந்துள்ளார். இச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் அது சட்டமாக்கப்படும்.

பலஸ்தீனத்தின் தேசியக் கொடி, பலஸ்தீனர்களை ஒன்று திரட்டி அவர்களை போராட வைக்கின்றது என்ற பல காரணங்களைக் குறிப்பிட்டே இச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனைப் பல அமைப்புக்கள் கோழைத்தனமான செயல் என கண்டனம் தெரிவித்துள்ளன. தேசியக் கொடியைத் தடுப்பதன் மூலம் பலஸ்தீனர்களின் சுதந்திர தாகத்தினை தடுத்துவிட முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook (Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.

உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top