நியூசிலாந்தில் பள்ளிவாசல் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் யாவருக்கும் நினைவிருக்கும்.
அதே பாணியில் நோர்வே நாட்டிலும் அந்நூர் பள்ளிவாசல் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தெய்வீனமாக Mohammed Rafiq என்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முன்னால் விமானப்படை வீரர், அனைவரையும் காப்பாற்றி இருக்கின்றார்.
Mohammed Rafiq மேலும் தெரிவிக்கும் போது “வெளிப்பகுதியில் இருந்து துப்பாக்கிச் சத்தத்தை கேட்டேன். தீவிரவாதி பள்ளிவாசலில் இருந்த இருவரையும் நோக்கி சுட ஆரம்பித்தார். அப்போது நான் அவரைப் பிடித்துக் கொண்டேன். அப்போது அவர் தனது விரலை எனது கண்களுக்குல் செருகினார். தீவிரவாதியைத் தரையில் தள்ளி வீழ்த்தி நிராயுதபாணியாக்கினேன்” என்று தனது அனுபவத்தைக் குறிப்பிட்டார்.
மதத்தளங்கள் மீது தாக்குதல் நடாத்துவது என்பது கண்டிக்கத்தக்கதாகும். அதனை யார் செய்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.