பிறருக்கு உதவி புரிவதற்கு எந்த அளவு பணமும் பொருளும் இருக்க வேண்டும் என்பதை விட; எந்தளவுக்கு விசாலமான மனம் இருத்தல் போதுமானது என்ற நிலைப்பாட்டுக்கு இக் கட்டுரை உங்களை இட்டுச் செல்லக் கூடும் !
பிறரிடம் கையேந்தி பிச்சை எடுத்த நபர் ஒருவர் தற்போது அனாதை இல்லம் ஒன்றையும் 2 பாடசாலைகளையும் ஆரம்பித்து நடாத்தி வருகின்றார். சிறுவர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வியானது வேறு எக் காரணங்களுக்காகவும் பறிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் ஆச்சரியப்படத்தக்க வகையில் பல சவால்களையும் தாண்டி சாதித்துக்காட்டியுள்ளார்.
Gazi Jalaluddin என்பவரே இத்தகைய முன்மாதிரி சாதனையின் சொந்தக்காரர் ஆவார். தன்னைப் பற்றி Gazi Jalaluddin குறிப்பிடும் போது, “நான் தற்போது ஒரு Taxi டிரைவராக இருக்கின்றேன். எனது சிறு பிராயத்தில் நான் கையேந்தி பிச்சை கூட எடுத்திருக்கிறேன். பல சந்தர்ப்பங்களில் வீதிதான் எனது தங்குமிடமாக இருந்திருக்கின்றது. நான் இளைஞனாக வளர்ந்த போது Taxi ஓட்டவும் கற்றுக் கொண்டேன். சிறு பிராயத்திலே எனக்கு கல்வி கற்றுக்கொள்வதற்கு அதிக விருப்பம் இருந்தபோதும் பொருளாதாரக் காரணிகளால் அதனை முழுமைப்படுத்த முடியவில்லை.” என்ற இவர் குறிப்பிட்டார்.
“எனது சிந்தனையெல்லாம், வேறு எவருக்குமே என்னைப் போன்றதொரு நிலைமை வந்துவிடக்கூடாது என்பதே..!” என்று அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.
அதிக புள்ளிகள் பெற்று முதல் நிலைகளில் கற்றுக்கொண்டிருப்பவர்களில், கல்வியை இறுதிவரை மேற்கொண்டு செல்வதற்கு பொருளாதார ரீதியாக சிரமப்படுபவர்களை தேடிக் கண்டுபிடித்து, அவர்களுக்கு கல்வி கற்றுக் கொள்ள இவர் உதவி வருகின்றார்.
Gazi Jalaluddin அவர்களின் தந்தை தீவிரமாக நோய்வாய்ப்பட்ட போது, முதல் நிலை மாணவனாக இருந்தும் கூட, வீதிக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டமைக்கு அவரே சாட்சி என்பது கவலைக்குரிய விடயம் என்பதோடு, அன்றைய நிலையில் Gazi Jalaluddin அவர்களுக்கு யாருமே கைகொடுக்க முன்வரவில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும்.
“இடை நடுவில் எனது பாடசாலையை விட்டு விலகியபோது, எனக்கு நிகழ்ததைப் போன்ற ஏதாவதொரு காரணத்தினால்தான் சிறுவர்கள் கல்வியைக் கைவிட்டு வீதிக்கு வருகின்றார்கள் என்பதை நான் அப்போது நன்கு உணர்ந்து கொண்டேன். இதற்கு ஏதாவதொரு வகையில் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று எனது மனம் அப்போதிலிருந்தே திட்டமிட்டுக்கொண்டிருந்தது.” என Gazi Jalaluddin கூறுகின்றார்.
தனது 12 வது வயதில் Kolkata வில் Rickshaw ஓட்ட ஆரம்பித்திருக்கின்றார் இவர். அதிலிருந்து கிடைத்த வருமானத்தில் Taxi ஓட்டக் கற்றுக் கொண்டு, இறுதியில் ஒரு Taxi Driver ஆகியிருக்கின்றார் Gazi Jalaluddin.
இவ்வாறு தனது பயணத்தை நகர்த்திச் சென்ற இவர் தற்போது ஒரு அநாதை இல்லத்தினையும் 2 பாடசாலைகளையும் நடாத்தி வருகின்றார்.
மேலும் இதுபோன்ற முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள். இதே போன்ற விடயங்களையும் நிகழ்வுமேடையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment