சீனாவின் திபெத் பகுதியில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாசல் Hebalin Mosque என்று அழைக்கப்படுகிறது. இப் பள்ளிவாசல் கடல் மட்டத்தில் இருந்து 3650 மீற்றர் உயரத்தில் அமையப் பெற்றுள்ளது. இப் பள்ளிவாசலே உலகின் நில மட்டத்தில் இருந்து உயரத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் என அடையாளப்படுத்தப்படுகின்றது.
1716 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இப் பள்ளிவாசல், 1959 ஆண்டு முற்று முழுதாக மாற்றப்பட்டு இன்றைய தோற்றத்தில் உள்ளதைப் போன்று வடிவமைக்கப்பட்டது.
மூன்று வழிகளைக் கொண்டுள்ள, உலகின் நில மட்டத்தில் இருந்து உயரத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் வளாகமானது மொத்தம் 2,600 m2 பரப்பினைக் கொண்டுள்ளது. தொழுகை அறை, சமூக மேம்பாட்டு அறை, சுரங்க அறை, உளூச் செய்யும் தடாகம் மற்றும் குளியல் அறை போன்ற மொத்த கட்டிடத்தின் பரப்பு 1,300 m2 ஆகும்.
திபெத்தியன் பாரம்பரிய சாயலை கொண்டமைந்துள்ள, இப் பள்ளிவாசல் இஸ்லாமிய கலையம்சங்களை கொண்டமைந்துள்ளது.
மேலும் முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.
உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment