முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், எதிர்கால ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் எனவும் எதிர்பார்க்கப்படும் கோட்டாபாய ராஜபக்ஷ அவர்களுடனான முஸ்லிம் கல்வியலாளர்கள், மற்றும் புத்திஜீவிகளின் சந்திப்பு 19:02:2018 அன்று கொழும்பு அத்துல்கோட்டையில் உள்ள “வியத்மக” காரியாலயத்தில் பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் முபிஸால் அபூபக்கர் அவர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
இந்நாட்டில் முஸ்லிம்கள் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டவர்கள், மட்டுமல்ல இந்நாட்டின் பல துறைகளுக்கு பங்களிப்புச் செய்தவர்கள். மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக் காலத்தில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பின்னர், எஞ்சிய இறுதி நான்கு வருடங்களில் பெரும்பாலான அபிவிருத்தித் திட்டங்கள் வட கிழக்கில் மேற்கொள்ளப்பட்டன. அதேவேளை நாட்டை ஒருமுகப்படுத்துவதற்கும், மக்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அபிவிருத்தியே சிறந்த வழிமுறை என்ற என்ற அடிப்படையில் மேற்படி பல திட்டங்கள், முன்கொண்டு செல்லப்பட்டன. அவ்வாறான திட்டங்களால் சிறுபான்மையினர் பல நன்மைகளை அடைந்துள்ளனர்.
இன்னும் முஸ்லிம் மக்களிடையே என்னை ஒரு இனவாதி என்று சுட்டிக் காட்டும் பல திட்டமிட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றை யாரும் நம்ப வேண்டாம். இவற்றுக்கு பின்னால் பல சக்திகள் உள்ளன. அவர்களின் நோக்கம் இந்நாட்டில் இனங்களிடையேயான உறவை சீர்குலைப்தேயாகும். எனக்கு, முஸ்லிம்களுடனான நீண்டகால உறவு உள்ளது. நான் படையினருக்குப் பொறுப்பாக இருந்த காலத்தில் கூட எனது மிக நம்பிக்கைக்கு உரியவராக இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக நான் நியமித்து இருந்தது “சுறே சலே” என்ற ஒரு மலே முஸ்லிம் அதிகாரியையே ஆகும். இன்னும் பல முஸ்லிம் இராணுவ அதிகாரிகளும் கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர உதவினர்.
அதேபோல் நான் பிறந்த ஊருக்கு அருகில் இருந்தது, ஒரு முஸ்லிம் கிராமம் ஆகும். அதுமட்டுமின்றி, மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான அரசில் மேற்கொள்ளப்பட்ட அதிகமான அபிவிருத்தித் திட்டங்களில் ஒப்பந்தக்காரர்களாகவும் அதனை நிறைவேற்றவும் நாங்கள் பல முஸ்லிம்களை நியமித்திருந்தோம். அத்தோடு, எமது ஆட்சிக் காலத்தில் கொழும்பில் வசித்த சேரிப்புற மக்களுக்கான அடுக்குமாடி வீட்டுத் திட்டங்களில், சில திட்டங்கள் முஸ்லிம்களை மட்டுமே உள்ளடக்கியதாகவும் அமைந்திருந்த்து. அந்த வகையில் நாம் யாருக்கும் துரோகம் இழைக்க வில்லை.
அது போலவே புத்தளத்தில் இன்று இடம்பெறும் குப்பை தொடர்பான திட்டம் பற்றி எங்களிடம் இருந்த அணுகுமுறையும் வேறுபட்டது. அது மக்களைப்பாதிக்காத முறையில் சமூக, சமயத் தலைவர்களின் அங்கிகாரத்துடன் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்து. ஆனால் அவை இன்று கவனத்திற் கொள்ளப்பட வில்லை.
அந்தவகையில் நாட்டை அபிவிருத்தி செய்யும் எமது எதிர்கால அரசியல், அபிவிருத்தித் திட்டங்களிலும் முஸ்லிம்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அதன்மூலமே இந் நாட்டை வளமிக்க நாடாக மாற்றி அமைக்க முடியும் என்பதே தனது இலக்காகும் என கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந் நிகழ்வில் பிரபல சட்டத்தரணிகள், வைத்தியர்கள், கணக்காய்வாளர்கள், விரிவுரையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டதுடன், முஸ்லிம்களின் முக்கிய பிரச்சினைகளையும், அவற்றைத் தீர்ப்பதற்கான வழி முறைகள் பற்றியும் கலந்துரையாடினர். இரண்டு மணித்தியாலம் இடம்பெற்ற இச் சந்திப்பு மிக முக்கிய முடிவுகளையும், எதிர்கால நம்பிக்கைகளையும் தருவதாய் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்,
சிரேஷ்ட விரிவுரையாளர்.
மேலும் இதுபோன்ற முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள். இதே போன்ற விடயங்களையும் நிகழ்வுமேடையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment