தேசிய மட்ட உதைப்பந்தாட்ட போட்டிக்கு தெரிவான அல் அஸ்ஹர் கல்லூரியின் (Al Azhar College) 12 வயதுக்கு கீழ் மாணவர்களுக்கு ஹெம்மாதகமை பிரதேசத்தில் மாபெரும் வாகனப் பேரணியுடனான வரவேற்பு வழங்கப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வினை Al Azhar College பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது . ஏழு கிராமங்களை சேர்ந்த மக்களும் ஒன்றிணைந்து விளையாட்டு வீரர்களையும் ஆசிரியர் நசார் அவர்களையும் மாலைகளை அணிவித்து வரவேற்றனர் .
மேலும் இந்த வரவேற்பு நிகழ்விற்கு குறுகிய கால அழைப்பினை ஏற்று சமூகமளித்த அனைவருக்கும் பழைய மாணவர்சங்கம் அதன் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றது (OBA -செயலாளர் )
உண்மையில் ஹெம்மாதகமை விளையாட்டுத்துறை வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்றால் மிகையாகாது. இந்த போட்டித்தொடர் பற்றிய விபரம்
இரத்தினபுரியில் அமைந்துள்ள முட்டுவ (Mudduwa) விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற இந்தப் போட்டித் தொடரில் சபரகமுவ மாகாணத்தினை சேர்ந்த 24 அணிகள் பங்கு பற்றின.
Al Azhar College அணி விளையாடிய போட்டி விபரம்
1. என். எம் பெரேரா மஹா வித்தியாலயத்திற்கு எதிராக 01-00 என்ற அடிப்படையில் வெற்றிபெற்றது.
2. ராஹுல மஹா வித்தியாலயத்திற்கு எதிராக 03-00 என்ற அடிப்படையில் வெற்றிபெற்றது.
3 தாருல் உலூம் மஹா வித்தியாலயத்திற்கு எதிராக 01-00 என்ற அடிப்படையில் வெற்றிபெற்றது.
4. அரையிறுதியில் சீவலி வித்தியாலயத்திற்கு எதிராக 01-00 என்ற அடிப்படையில் வெற்றிபெற்றது.
5. இறுதி போட்டியில் பதுரியா மத்திய கல்லூரிக்கு எதிராக 01-00 என்ற அடிப்படையில் தோல்வியை தழுவி இரண்டாம் இடத்தினை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு பெற்றுள்ளது.
இந்த சாதனையினை நிலைநாட்டுவதற்கு முக்கிய பங்காற்றிய அல் அஸ்ஹர் கல்லூரியின் விளையாட்டுப் பொறுப்பாசிரியரும் பயிற்றுவிப்பாளருமான நாசர் ஆசிரியர் பற்றிய ஒரு சிறு குறிப்பு.
பள்ளிபோருவை கிராமத்தினை சேர்ந்த M F A நசார் தனது கல்வியினை அல் அஸ்ஹர் கல்லூரி , மாவனல்லை சாஹிரா கல்லூரி மற்றும் கம்பளை ஸாஹிரா கல்லூரி ஆகியவற்றில் கற்றார் தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழத்தில் கலைத்துறையில் பட்டபடிப்பினையும் (B.A) உடற்பயிற்சி மற்றும் விளையாடு விஞ்ஞான துறையில் டிப்ளோமா பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார்.
இவரது ஆசிரியர் சேவைக்காலத்தில் வரக்காப்பொல Babul Hassen Central College அணி மூன்று தடவைகள் தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவாகியமையும் குறிப்பிடத்தக்கது.
நசார் ஆசிரியர் அவர்கள், பார்ப்பதற்கு நேர்த்தியானவர் (Smart), பழகுவதற்கு இனிமையானவர். ஆசிரியர் என்பவர் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழவேண்டும் என்று கருதி அதன்படி வாழ்ந்துவருபவர். அதே நேரம் புதிதாக ஆசிரியர் பணிக்கு இணைந்துகொள்பவர்களுக்கு அதிகம் வழிகாட்டும் தன்மையும் உடையவர் என்பதோடு புதிதாக ஆசிரியர் பணிக்கு இணைந்தவர்களை (Teacher Quality நோக்கி)நெறிப்படுத்தக்கூடிய ஆளுமையுடையவர்.
நசார் ஆசிரியரின் அணுகுமுறை எப்போதும் மாணவர்களின் ஆளுமை வளர்ச்சியை முன்னோக்கி நகர்ந்தும் அணுகுமுறையுடையதாகவே அமைந்திருக்கும் என்பது, சக ஆசிரியர் சமூகத்தின் அவதானமாகும்.
இத்தகைய பெறுமானங்களையுடைய நசார் ஆசிரியர் அவர்களை Al Azhar College தமது ஆளணியாகக் கொண்டுள்ளமை பாடசாலைக்கு பெருமைக்குரியதாகும்.
அல்ஹம்துலில்லாஹ்
மேலும் இதுபோன்ற செய்திகளையும், முஸ்லிம் உலகின் வரலாற்றினையும் பெற்றுக்கொள்ள எமது Facebook Page ஐ like செய்யுங்கள்