குவைத்தில் எண்ணெய் விலையில் தொடர்ச்சியான சரிவுநிலை, பாராளுமன்றத்தில் பல வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்திருக்கின்றது. இறுதியில் குவைத் அமைச்சரவை ராஜினமா செய்துள்ளது. விரைவில் பாராளுமன்றத் தேர்தலை குவைத் சந்திக்கவுள்ளது. எண்ணெய் வளமிக்க நாடொன்றில் இத்தகைய நிகழ்வு இடம்பெற்றிருப்பது, ஏனைய மத்திய கிழக்கு நாடுகளின் அரசாங்கங்களையும் அச்சமடையச் செய்திருக்கின்றது.
ஞாயிற்றுக்கிழமை (16.10.2017) நடைபெற்ற அமைச்சரவையின் அதிஅவசர கூட்டத்தைத் தொடர்ந்து, குவைத் அரசர் சபஹ் பின் அஹமத் அல் சபஹ் (Sabah bin Ahmed al-Sabah) பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான ஆணையைப் பிரப்பித்தார்.
குவைத்தின் பாராளுமன்றம் 4 ஆண்டுகால தவணையைக் கொண்டதாகும். இந்தத் தவணை 2017 ஜூலை மாதம் வரை ஆயுளைக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பொருளாதாரப் பாதுகாப்பும் பிராந்தியத்தின் சவாலுக்கான முன்னெடுப்பாகவுமே இந்த பாராளுமன்றக் கலைப்பை நோக்க வேண்டியுள்ளதாக குவைத்தின் பாராளுமன்ற சபாநாயகர் குறிப்பிட்டார்.