இன்ஷா அல்லாஹ் ஹஜ் பெருநாளை முன்னிட்டு கத்தார் வாழ் புத்தளம் சகோதரர்களின் கூட்டமைப்பு வழமைப்போன்று அங்கத்தவர்களுக்கான ஒன்று கூடல் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
13-09-2016 – செவ்வாய்கிழமை கத்தார் உம்பாப் கடற்கரையில் நடைபெற ஏற்பாடாகியுள்ள இவ்வொன்று கூடலுக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றார்கள்.
பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இவ்வொன்று கூடலில் மூட்டையடித்தல், கயிறிழுத்தல், பானை உடைத்தல், கரப்பந்தாட்டம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள அதேவேளை இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து தேவையுடையோர் மற்றும் இடம் தொடர்பான விபரங்கள் அறிய சகோ. அப்துல்லாஹ் 70507082, சகோ. சாபிக் 74480584 ஆகியோரை தொடர்பு கொள்ள முடியும்.