ஒவ்வொரு ஊரினதும் அதே போன்று ஒவ்வொரு நாட்டினதும் மஸ்ஜித்கள் ஏதோவொரு விதத்தில் தனித்துவமானவையாகும். அவ்வாறு தனித்துவமான எமது பார்வையை கவர்ந்த சில மஸ்ஜித்கள் இப்போது உங்கள் கண்களை அலங்கரிக்கப்போகின்றன. எதிர்காலத்தில் இவ்வாறு தனித்தன்மை வாய்ந்த, கண்களைக் கவருகின்ற, எளிமையான மஸ்ஜித்கள் பற்றிய விபரங்கள் அடிக்கடி நிகழ்வுமேடையை அலங்கரிக்க இருக்கின்றன. இம் மஸ்ஜித்கள் எவ்வித தரப்படுத்தல் அடிப்படையில் இலக்கமிடப்படவில்லை.
1. ரஷ்யாவில் அமைந்துள்ள Saint Petersburg மஸ்ஜித்.
இம் மஸ்ஜித்தின் முகப்பும் இரண்டு மினராக்களும் அழகிய மாபிள் வேலைப்பாடுகளுடன் பார்ப்பவர்களை வசீகரிக்கும் வகையில் அமையப் பெற்றுள்ளது.
2. குவைத் – பெரிய மஸ்ஜித்.
கவர்ச்சி நிறைந்த, ஓய்வெடுப்பதற்கும் மனதிற்கு இதமளிக்கக்கூடிய வகையில் பார்வைக்கு இதழுடன் கூடிய தங்கப் புஷ்பம் போன்ற அமைப்பில் உள்ளது இம் மஸ்ஜித்.
3. ஈராக்கில் அமைந்துள்ள Jalil Khayat மஸ்ஜித்.
இம் மஸ்ஜித் 2007ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. உட்புறச் சுவர்களும் மேற் கூரைகளும் இஸ்லாமிய கால நிற வேலைப்பாடுகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன.
4. துருக்கியில் அமைந்துள்ள சுல்தான் அஹமத் மஸ்ஜித்.
நீலப் பள்ளி என்றும் அறியப்படுகின்ற இம் மஸ்ஜித், கைகளினால் நிறம் தீட்டப்பட்டுள்ள 20,000 மாபிள்களினால் அலங்கரிக்கப்பட்டுள்ளமை இம் மஸ்ஜித்தின் விசேட அம்சமாகும்.
5. இலங்கையின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள Jami Ul-Alfar மஸ்ஜித்
அழகியதோற்றத்தில் அமையப்பெற்றுள்ள இம் மஸ்ஜித் இந்திய மற்றும் இஸ்லாமிய கட்டிடக் கலையின் அம்சங்களை உள்ளடக்கிக் காணப்படுகின்றது. 6 தளங்களைக் கொண்டமைந்துள்ள இம் மஸ்ஜித் 10,000 பேர் தொழக்கூடிய வசதி அமைப்பினைக் கொண்டுள்ளது.
6. இந்தியாவில் அமைந்துள்ள Taj-ul Masajid, Bhopal.
இந்தியாவில் Bhopal நகரில் இவ் கண்ணை கவரும் மஸ்ஜித் அமைந்துள்ளது. ஆசியாவில் உயரமான மஸ்ஜித்களில் இப் பள்ளிவாசலும் ஒன்றாகும். 18 அடுக்குகளைக் கொண்டு இருபக்கமும் அமைக்கப்பட்டுள்ள மினராக்கள் கம்பீரத் தோற்றத்தை உடையதாக கண்ணைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.
7. அபு துபாய் – Sheikh Zayed மஸ்ஜித்
உலகில் காணப்படும் 7வது பெரிய மஸ்ஜித் இதுவாகும். இம் மஸ்ஜித்தில் ஒளி கொடுக்கக்கூடிய Lighting System ஆனது, நிலவின் ஒளியை பிரதிபலிப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்திலிருந்து கடும் நீல நிறம் வரை படிப்படியாக, மெதுவாக நிலவினைப் போன்று மாறிச் செல்லும் ஒளி அமைப்பு அனைவரையும் கவரக்கூடியதாகும்.
உங்கள் மஸ்ஜித்தும் இவ்வாறு தனித்துவமானதாக இருந்தால் நீங்களும் நிகழ்வுமேடையுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
மேலும் இதுபோன்ற முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.
உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. கருத்துகளை பதிக கீழே கிளிக் செய்யவும்