சமூக ஊடகங்களிலும் இணையத் தளங்களிலும், கஃபதுல்லாவும் மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலும் முற்றிலும் மூடப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியிடப்படுகின்றன.
ஆனால் சவுதி அரசு, இவ் இரு புனித மஸ்ஜித்களும் இஷாத் தொழுகையை தொடர்ந்து ஒரு மணித்தியாலயத்தின் பின் மூடப்பட்டு சுபஹ் தொழுகைக்கு ஒரு மணித்தியாலயத்துக்கு முன்னர் திறக்கப்படும் என அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் சர்வதேச நாடுகள் பலவற்றிலும் சவுதியிலும் பரவியதை அடுத்தே இந் நடவடிக்கையை சவுதி மேற்கொண்டுள்ளது.
இதே நேரம் வெளிநாட்டவருக்கான உம்ரா விசாவினை, புதன்கிழமையில் இருந்து தற்காலிகமாக வழங்காமலிருப்பதற்கு சவுதி தீர்மானித்திருந்தது.
வைரஸ் கிருமிகளை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டே இத் தீர்மானங்களை மேற்கொண்டதாக சவுதி தெரிவித்துள்ளது.