55 வயதையுடைய Iman Yassin Khatib என்பவர், இஸ்ரேல் பா.ம தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இஸ்ரேலில் உள்ள அரபு கட்சியொன்று, மிதவாத இஸ்ரேல் கட்சியொன்றுடன் இணைந்து போட்டியிட்டே இவர் பா.ம க்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு இவ் மிதவாதக் கட்சி பெற்ற வாக்குகளில் 21% ஆன வாக்குகள் இஸ்ரேலில் உள்ள முஸ்லிம்களின் வாக்குகளாகும்.
நான்கு பிள்ளைகளின் தாயான Iman Yassin Khatib அரசியலில் நுழைவதற்கு முன்பு, நாசரேத்தின் புறநகரில் உள்ள கலிலீ கிராமமான யஃபாத் அன்-நஸ்ரேயில் ஒரு சமூக மையத்தின் முகாமையாளராக பணியாற்றினார்.
ஹிஜாப்பைக் காரணமாகக் கொண்டு இஸ்லாமிய எதிர்ப்புணர்வு தூண்டப்படக் கூடும் என்பதை Iman Yassin Khatib உணர்ந்து வைத்துள்ளார். “நான் ஹிஜாப்பை அணிவதால் என் வாழ்க்கையில் எதிர்கொண்ட ஒவ்வொரு சவாலும் கடினமானது,” என்று அவர் கூறினார்.