News

இலங்கையில் புற்றுநோய்க்கெதிரான போராட்டம்!

புற்றுநோய்
இலங்கையில் புற்றுநோய்க்கெதிரான போராட்டம்!

புற்றுநோய்! மனித சமூகத்திற்கு சவால் விட்டுக்கொண்டிருக்கும் ஒரு கொடிய நோய்.

ஆனால் ஆரம்பத்திலேயே புற்றுநோயைக் கண்டறிந்துவிட்டால் சுகப்படுத்திவிடலாம். ஆரம்பத்தில் கண்டறிந்துவிட்டாலும் புற்றுநோய்ச் சிகிச்சைக்கான செலவுகளும் மிக அதிகமாகும். சிகிச்சைக்காக குறிப்பிட்ட சில அரச வைத்தியசாலைகளில் மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டிவரும்.

இத்தகைய பிரச்சினைகளுக்கு மத்தியில் இலங்கையில் இருந்து புற்றுநோயை முற்றாக இல்லாதொழிப்பதற்கு ‘Fight Cancer Team‘ பணியில் இறங்கியுள்ளது. இக் குழுவின் தலைவர் M.S.H. Mohamed. புற்றுநோயின் வலியை நன்கு உணர்ந்தவர். புற்றுநோய்க்கு தனது மகனை பழி கொடுத்தவர். இந்த வேதனை இன்னும் ஒருவருக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்று பாடுபட்டு வருபவர்.

இலங்கையின் முதன்மை புற்றுநோய் வைத்தியசாலை மஹரகமவில் அமைந்துள்ளது. இவ் வைத்தியசாலைக்கு ஏற்கனவே கோடிக்கணக்கான பெறுமதியுள்ள புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் இயந்திரமொன்றை ஒரு வருடகாலத்திற்குள் பெற்றுக்கொடுக்கும் திட்டம் ஒன்றை வரைந்து அதனை 3 மாத குறுகிய காலத்துக்குள்ளேயே நிதி திரட்டி, நிறைவைற்றிக் காட்டியவர் இந்த Mohamed.

Fight cancer Team

தற்போது இன்னும் ஒரு பணி எம்மத்தியில் எஞ்சியுள்ளது. புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் இயந்திரம் ஒன்றைப் பெற்றுக் கொடுக்கும் பணிதான் அது. M.S.H. Mohamed தலைமையிலான ‘Fight Cancer Team’ அதற்கான 100 கோடி ரூபா பெறுமதியான நிதியினைத் திரட்டும் பணியில் இறங்கியுள்ளது. அதற்கான நிதிப் பங்களிப்பினை வழங்கி புற்றுநோயை இல்லாதொழிப்போம்.

https://www.facebook.com/fightcancer.lk/videos/325467011486664/

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top