வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களில் பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதி அமைச்சர் புத்திக பத்திரன பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05.02.2019) குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வு மேலோங்கி இருந்தது. பல்வேறு இடங்களிலும் இதுவே பேசுபொருளாக இருந்தது.
தற்போது ஆறுதலான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இலங்கையில் ஹலால் தொடர்பாக உறுதிப்படுத்தும் நிறுவனமான ‘வரையறுக்கப்பட்ட ஹலால் சான்றுறுதிப் பேரவை’ – HALAL ACCREDITATION COUNCIL குறிப்பிட்ட பால்மாக்கள் பன்றிக் கொழுப்பு அற்றவை என உறுதிப்படுத்தியுள்ளது.