அமெரிக்கா புளோரிடாவில் உள்ள இஸ்லாமிய கலாச்சார நிலையத்தின் மீது ஹஜ் பெருநாள் தினத்தின் முன் இரவுப் பகுதியில் (12.30) தீ வைக்கப் பட்டுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை அந்தக் கலாச்சார நிலையத்திலேயே நடாத்துவதற்கு எதிர்பார்த்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 11 அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல் நினைவு கூறப்பட்ட நிலையில், அதனுடன் தொடர்புபடுத்தி இத் தீவைப்பு சம்பவத்தை பாதுகாப்புத் தரப்பு ஆராய்ந்து வருகின்றது.