கடந்த ஐந்து ஆண்டுகளாக 12,000 ஆயிரத்திற்கு அதிகமான குழந்தைகள் உட்பட 300000 க்கு அதிகமான உயிர்கள் சிரியாவில் போக்கப்பட்டுள்ளன. நாட்டு மக்கள் நாளாந்தம் ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கப்படுகின்றனர். எஞ்சிய சிலர் அகதிகளாக இடம் பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சிரிய அதிபரும் அவரது குழுவினரும் இன்று சிரியா – தரயா நகரில் பெருநாள் தொழுகையில் ஈடுபட்டனர்.