இவ் வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றும் பொருட்டு 164 நாடுகளில் இருந்து ஹஜ் யாத்திரிகர்கள் வருகைதந்திருந்தனர்.
ஹஜ் கிரியை ஆரம்பமாவதற்கு முன்பிருந்து அதன் இறுதிக் கட்டம் வரை, சவூதியின் பாதுகாப்புத் தரப்பினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அது மாத்திரமன்றி ஹஜ்ஜாஜிகளுக்கு உதவி ஒத்தாசையும் புரிந்திருந்தனர்.
ஹஜ் நிகழ்வுகள் நிறைவையொட்டி பட்டத்து இளவரசர் முஹம்மது பின் நாயிஃப் அவர்கள் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று படையினருக்கு அரசின் சார்பாக நன்றியினைத் தெரிவித்தார்