Muslim History

லிபியாவின் சிதைவுக்கு காரணம் இவர்கள் தான், பிரிட்டிஷ் பாராளுமன்ற நிலையியல் குழு கண்டனம்.

Libya

லிபியா என்ற நாட்டின் பெயரை அறிந்த அளவுக்கு, இந் நாட்டைப் பற்றி அறியவேண்டிய இன்னும்மொரு பக்கமும் இருக்கின்றது.

அன்றைய லிபியாவின் பொருளாதாரம் பற்றி உலக அரங்கின் பார்வை இரண்டு விதத்தில் அமைந்திருந்தது.
ஒன்று லிபியாவின் பொருளாதாரம் உலக நாடுகளால் கண்டுகொள்ளப்படவில்லை. மற்றையது லிபியாவின் பொருளாதார நிலைமை வல்லரசு நாடுகளுக்கு பெறாமை கலந்த ஆச்சரியத்தினை கொடுத்திருத்தல் வேண்டும்.

லிபியாவின் எந்த ஒரு பிரஜையையும் வீடற்றவர் என்ற நிலைமைக்குள் அன்றைய முஅம்மர் கதாபியின் ஆளுகை இட்டுச் செல்லவில்லை. சகலருக்கும் வீட்டினை அன்றைய லிபிய அரசு பெற்றுக் கொடுத்தது.

அதேபோன்று அந் நாட்டின் பிரஜை ஒருவர் தொழிலொன்றைப் பெற்றுக்கொள்ளும் வரை அன்றைய அரசு வேதனத் தொகையொன்றை வழங்கி வந்தது.

வல்லரசு நாடுகள் கூட இத்தகைய பொருளாதார மேம்பாடுடைய திட்டங்களை கொண்டிருக்கவில்லை என்பதை குறிப்பிட்டுக் கூறியே ஆகவேண்டும்.

இவ்வாறு பொருளாதார வளர்ச்சி பற்றி அலட்டிக் கொள்ளாமல் நகர்ந்து கொண்டிருந்த லிபியாவில் கிளர்ச்சியாளர்களின் புரட்சி மூலம் அன்றைய முஅம்மர் கதாபியின் அரசாங்கம் 2011 ஆண்டு அகற்றப்பட்டது.

உள்நாட்டில் புரட்சிகள் ஏற்பட்ட போது அதனை லிபிய அரசும் உரிய முறையில் கையாண்டு, புரட்சியை அடக்கும் வல்லமையைக் கொண்டிருந்தது. அப்போதுதான் பிரிட்டனும் பிரான்ஸும் புரட்சியாளர்களுக்கு இராணுவ மற்றும் நிதி உதவிகளை வழங்கி லிபிய அரசை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டது.

David Cameron


இவ்வாறு புரட்சிக் குழுக்களுடன் சேர்ந்து பிரிட்டனும் பிரான்ஸும் லிபிய அரசை அகற்ற நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் அன்றைய பிரிட்டனின் பிரதமர் டேவிட் கமறுனுக்கு பிரிட்டன் பாராளுமன்றத்தின் நிலையியல் குழு கண்டனத்தை வெளியிட்டுள்ளது. மேலும் வான் தாக்குதல் தொடர்பிலும் டேவிட் கமறுனிடம் நிலையான கொள்கை ஒன்று காணப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலம் கடந்த கண்டிப்புக்களால் ஆன பலன் ஏதும் உண்டோ என்று மனதோரம் ஒரு கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது ஆகும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top