யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் அமைக்கப்பட்ட தொழிநுட்ப பீடத்தின் புதிய கட்டிட திறப்பு விழா நேற்று (2019.02.15) வெகு விமர்சையாக நடைபெற்றது .இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக நகரத்திட்டமிடல் , நீர் வழங்கள் மற்றும் உயர் கல்வி அமைச்சர் கௌரவ றஊப் ஹக்கீம் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இதன் போது வவுனியா வளாக முஸ்லிம் மாணவர்களோடு ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றதோடு அமைச்சர் அவர்களுக்கு நினைவுச்சின்னம் மற்றும் சஞ்சிகையும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீழே காணலாம்.
தகவல்: றிஸ்வான்.