மூதூர் பகுதியிலிருந்து முதலாவது வெளிநாட்டுப் பல்கலைக் கழக பெண் விரிவுரையாளராகச் சென்ற சாதனையாளராக விரிவுரையாளர் ஏ.எஸ்.முஜாஹிதா B. A(Hons) (MA) என்பவர் திகழ்கிறார்.
இவர் ஓய்வு பெற்ற அதிபர் அப்துல் ஸமது மற்றும் கதீஜா உம்மா தம்பதிகளின் மகளாக 1969-10-13 அன்று மூதூர் நெய்தல் நகர் எனும் இடத்தில் பிறந்தார்.
தனது ஆரம்பக் கல்வியை தி/மூ/அல்ஹிலால் மகா வித்தியாலயத்திலும் (தி/மூ/முஸ்லிம் மகளீர் கல்லூரி) இடை நிலைக் கல்வியை தி/மூ/அந்நஹார் மகா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை மாத்தளை அல் மின்ஹாஜ் மகா வித்தியாலயத்திலும் பயின்றார்.
சுமார் மூன்று மாதங்கள் தி/மூ/அல்ஹிலால் மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாக பணியாற்றினார். இவர் மூதூர் பிரதேசத்தில் பிரபல ஆங்கில ஆசிரியராக சேவையாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர் ஏ.எஸ்.முசௌமி அவர்களது சகோதரியுமாவார்.
1990 ஆம் ஆண்டு மலேசியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழக(IIUM) நுழைவுக்கு தேர்வு பெற்று அங்கு சென்றார். ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கொண்ட நான்கு வருட கற்கை நெறியைப் பூர்த்தி செய்து ஆங்கில பட்டதாரியாக 1994ல் வெளியேறி 1996 ஆம் ஆண்டு அதே பல்கலைக் கழகத்தில் ஆங்கில மொழியில் முதுகலை மாணி (MA) பட்டம் பெற்றார்.
ஏறத்தாழ மூன்று வருடங்கள் பகுதிநேர விரிவுரையாளராக Matriculation Centre, IIUM ல் சேவையாற்றிய அவர் தனது கணவரது வேலை வாய்ப்பு நிமித்தமாக குடும்பத்தோடு ஓமான் சென்றார்.
ஏ. எஸ். முஜாஹிதா அவர்கள் 2005 ஆம் ஆண்டு ஓமான் நாட்டு பல்கலைக்கழகமான மஸூம் பல்கலைக்கழகத்தில் சுமார் நான்கு வருடங்கள் ஆங்கில விரிவுரையாளர் ஆக கடமையாற்றியதோடு 2009 ஆம் ஆண்டு ஓமான் நாட்டின் ஒரேயொரு பெண்கள் பல்கலைக்கழகமான அல்-ஸஹ்ரா பல்கலைக்கழகத்தில் (2009-2013) நான்கு வருடங்களும் 2013 ஆம் ஆண்டு Oman Tourism University College லும் ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றினார்.
ஆங்கில மொழியில் இணைப் பேராசிரியராக ஓமானில் பணிபுரியும் சூடான் நாட்டின் பிரஜையான இவரது கணவரும் குழந்தைகளும் பலமுறை மூதூருக்கு வந்து செல்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தற்போது விரிவுரையாளர் ஏ.எஸ்.முஜாஹிதா அவர்கள் ஓமான் நாட்டின் பல்கலைக் கழகமான Oman Tourism University College இல் ஆங்கில மொழி விரிவுரையாளர் ஆக பணியாற்றுவதோடு தனது மேற்படிப்பையும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
அன்னாரது கல்விச் சேவைகளை அல்லாஹ் பொருந்திக் கொள்வதோடு அவரது கல்வி வளர்ச்சியை அபிவிருத்தி செய்தருள்வானாக
தொகுப்பு:-
M.M.MANASEER (NATHWI)
மேலும் இதுபோன்ற முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.
உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment