மூதூர் பகுதியிலிருந்து முதலாவது வெளிநாட்டுப் பல்கலைக்கழக விரிவுரையாளராக சென்ற சாதனையாளராக எம்.ஐ.ரஹீம் (நளீமி) MA என்பவர் திகழ்கிறார்.
இவர் நெய்னா முஹம்மது இப்றாஹீம் மற்றும் காதர் உம்மா தம்பதிகளின் மகனாக 1958-05-04 அன்று மூதூர் அக்கரைச் சேனை எனுமிடத்தில் பிறந்தார்.
தனது ஆரம்ப கல்வியை கேணிக்காடு அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையிலும் (தி/அல்ஹிலால் மத்திய கல்லூரி) மேற் கல்வியை 1973 ஆம் ஆண்டு பேருவலை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்திலும் தொடர்ந்து 1981 இல் “நளீமி” பட்டம் பெற்று வெளியேறி ஏறத்தாழ இரண்டு வருடங்கள் ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் உதவி விரிவுரையாளராகக் கடமையாற்றினார். இதனால் மூதூர் பகுதியிலிருந்து தெரிவாகிச் சென்ற முதலாவது நளீமி எனும் சிறப்பைப் பெறுவதோடு கிழக்கு மாகாணத்திலிருந்து சென்ற முதலாவது ஜாமிஆ நளீமிய்யா கலாபீட மாணவன் எனும் சிறப்பையும் பெறுகிறார்.
1983 ஆம் ஆண்டு மலேசியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி அங்கு சட்டமாணி (LLB) கற்கையை நிறைவு செய்து பட்டம் பெற்ற பின்னர் Islamic Revealed Knowledge எனும் துறையில் முதுமாணி (MA) பட்டமும் பெற்றார்.
1988ஆம் ஆண்டு மலேசியா சர்வதேச பல்கலைக்கழகத்தில் இரு வருடங்கள் உதவி விரிவுரையாளராகவும் பின்னர் அப்பல்கலைகழகத்தின் பிரிவான Matriculation Centre ல் 27 வருடங்கள் விரிவுரையாளராகவும் கடமையாற்றினார். இதனால் மூதூர் பகுதியிலிருந்து முதலாவது தெரிவாகி வெளிநாட்டில் கடமைற்றிய விரிவுரையாளர் எனும் பெருமையை கொள்கிறார்.
அஷ்ஷைஹ் எம்.ஐ.ரஹீம் (நளீமி) MA அவர்கள் 1995 ஆண்டு துணை பீடாதிபதியாகவும் (Deputy HOD), 1999 ஆம் ஆண்டு பீடாதிபதியாகவும்(HOD) பணியாற்றியதோடு எமது தாய் நாட்டுக்காகவும் மூதூர் மண்ணுக்காகவும் பெருமை சேர்க்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுமார் மூன்றரை தசாப்த காலங்களைக் கல்விக்காக அர்ப்பணம் செய்த எம்.ஐ.ரஹீம் (நளீமி)MA அவர்கள் தனது குடும்பம் சகிதம் மலேசிய நாட்டில் வாழ்ந்து வருவதோடு தனது சொந்த மண்ணுக்காக பல சேவைகளையும் செய்து வருகிறார். நமது நாட்டிலிருந்து பல மாணவர்கள் மலேசிய பல்கலைக்கழகளில் சேர்ந்து படித்து பட்டங்கள் பெற காரணகர்த்தாவாக செயற்படுவதும் நோன்பு காலங்களின் போது பலவிதமான உதவிகளைச் செய்து வருவதும் ஹஜ் பெருநாள் தினங்களின் போது இலங்கையின் பல்வேறு இடங்களில் உழ்ஹிய்யாக்களை வழங்கி வருவதுமான ஏற்பாடுகளையும் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு மூதூர் மண்ணிற்கும், நாட்டிற்கும் மலேசிய மக்களுக்கும் சேவை செய்த மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக் கழக விரிவுரையாளர் எம்.ஐ.ரஹீம் (நளீமி)MA அவர்கள் தேக சுகத்தோடு வாழ சகலரும் பிரார்த்திப்போமாக.
தொகுப்பு:-
M.M.MANASEER (NATHWI)
NEITHAL NAGER
MUTUR-01
மேலும் இதுபோன்ற முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள். இதே போன்று உங்கள் ஊர் சம்பந்தப்பட்ட முதன்மைகளையும் விடயங்களையும் நிகழ்வுமேடையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. கருத்துகளை பதிய கீழே கிளிக் செய்யவும்