YORKSHIRE இங்கிலாந்தின் வடபகுதியில் அமைந்துள்ள ஒரு பிரதேசமாகும். இதில் மேற்கு YORKSHIRE போலிஸார், முஸ்லிம் பெண் போலிஸாருக்கு இஸ்லாமிய அமைப்பிலான சீருடையை அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளனர்.
“பெண்களின் அங்க அமைப்புக்கள் வெளித்தெரியா வண்ணம் இருக்கக்கூடிய புதிய சீருடை, கடந்த மாதத்தில் இருந்து ஒத்திகை பார்க்கப்பட்டு வருகின்றது. இத் திட்டம் முஸ்லிம் பெண் போலிஸாரின் பரிந்துரை கருத்தில் எடுக்கப்பட்டு எமது ஆடை வடிவமைப்பு Manager உடன் இணைந்து செயல்வடிவம் கொடுக்கப்படுகின்றது. இந்தச் சீருடையை அணிய விரும்பும் எந்தவொரு எமது அலுவலரும் அதனைப் பெற்று அணிய முடியும். அதே நேரம் எமது போலிஸ் துறையில் முஸ்லிம் பெண்கள் இணைவதற்கு இந் நடவடிக்கை உந்துசக்தியாக அமையும் என எதிர்பார்க்கின்றோம்.” என்று Assistant Chief Constable – Angela Williams, September 17 ஆம் திகதி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
“முன்னர் போலிஸ் துறையில் முஸ்லிம்கள் இணைந்ததைவிட எதிர்காலத்தில் ஆர்வத்துடன் இணைந்து கொள்வார்கள் என நான் எதிர்பார்க்கிறேன். எந்தச் சமூகத்தினரும் எமது சீருடைகள் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்து மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.”
ஏற்கனவே British போலிஸார் முஸ்லிம் பெண் போலிஸாருக்கு சீருடை அணியும்போது ஹிஜாப்பை அணிய அனுமதி வழங்கி இருந்தனர். West Yorkshire போலிஸார் முதல் தடவையாக முஸ்லிம் பெண் போலிஸாருக்கென்று பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சீருடையை வழங்க முன்வந்துள்ளனர்.
Chief Constable – Dee Collins குறிப்பிடும்பொழுது, “சில பெண்கள், போலிஸாரின் சீருடையானது தமது பணிகளை மேற்கொண்டு செல்வதற்கு தடையாக இருப்பதாக உணர்கின்றனர். இப்போதைய நகர்வு நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடியதாகும். நாங்கள் தொடர்ச்சியாக எமது முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவுள்ளோம்.” என மேலும் குறிப்பிட்டார்.
மேலும் முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.
உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment.