ஈரான் : கொரோனா வைரஸ் காரணமாக ஈரானில் இதுவரை 19 பேர் மரணமடைந்துள்ளதாக அந் நாட்டு தொலைக்காட்சிச் சேவை அறிவித்துள்ளது. மேலும் 139 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
குவைத் : இதுவரை 25 கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக, குவைத் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
பஹ்ரைன் : ஈரானில் இருந்து பஹ்ரைனுக்கு வந்த 3 பெண்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து பஹ்ரைனில் கொரோனா தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான்: இதே நேரம் தெற்காசிய நாடான பாகிஸ்தானிலும் இரண்டு கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாக, அந் நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. (26.02.2020)
இதே நேரம் சவூதி அரேபியாவிற்கு வரும் உம்ரா யாத்திரிகர்கள் மக்கா, மதீனாவுக்கு செல்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் உம்ரா விசா வழங்குவதனை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாகவும் சவூதி அறிவித்துள்ளது.