தேசிய வாசிப்பு மாதம் – 2017 இனை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச சபையானது 2018-02-07 ல் ஆலங்குளத்திலமைந்துள்ள அஷ்ரப் ஞாபகார்த்த பாெது நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களை வழங்கியது.
இந் நிகழ்வானது பிரதேச சபையின் செயலாளர் திரு. M.I.M. பாயிஸ் அவர்களின் வழிகாட்டலில் நூலகர் திரு. A.L.M. முஸ்தாக் தலைமயில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் செயலாளர் சார்பாக அபிவிருத்தி உத்தியாேகத்தர் திரு. M.H. ரியால் மெளலவி அவர்கள் கலந்து கொண்டு நூல்களை வழங்கி வைத்தார்கள்.
நூலக உதவியாளர் திருமதி ரினோஸா, திரு.பாயிஸ் மற்றும் திரு. றிபாஸ் ஆகியோரும் இங்கு கலந்து கொண்டனர்.