துருக்கியின் தலைநகர் அங்காராவில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது திங்கள் [20/08/2018] அதிகாலை நேரத்தில் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டுள்ளது. துருக்கிக்கும்-அமெரிக்காவுக்கும் இடையிலான ராஜதந்திர மோதலை அடுத்தே இந் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு அமெரிக்க தூதரகம் விடுமுறைக்காக மூடப்பட்டிருந்த நிலையிலேயே துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப் பட்டுள்ளது. இதன் போது எவருக்கும் காயமேதும் ஏற்படவில்லை என துருக்கிப் பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனம் ஒன்றில் வந்தே இத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook (Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்