ஜேர்மனின் Hanau நகரில் 17 வயது நிரம்பிய வீரதீர செயல் புரிந்து மரணமடைந்த Mustafa Sözen என்ற முஸ்லிம் இளைஞனின் இறுதிச் சடங்கு நிகழ்வில் நூற்றுக்கணக்கான ஜேர்மென் மக்கள் கலந்து கொண்டு தமது அனுதாபத்தை நேரில் தெரிவித்துள்ளனர்.
புகையிரதத்தினால் அடிபடவிருந்த வயது முதிர்ந்த ஒருவரின் உயிரை தனது உயிரைக் கொடுத்து Mustafa Sözen என்ற முஸ்லிம் இளைஞர் காப்பாற்றியுள்ளார்.
“நான் ஒரு பிரபலமான அல்லது செல்வந்தரான மனிதனல்ல. எனது மகனின் வீர-தீரச் செயலினாலேயே இந்தளவு சனத்திரல் இங்கு கூடியுள்ளது.” என்று உயிரிழந்த இளைஞனின் தந்தை Ejder Sözen தனது மகனின் மரணச்சடங்கு நிகழ்வில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இளைஞன் தனது தொழிற் கல்வியை Lab Technician ஆக பயின்று கொண்டிருந்தவராவார். தனது கற்றல் நடவடிக்கையின் பொருட்டு புகையிரதத்திற்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் மது அருந்திய நிலையில் ஒரு வயோதிபர் புகையிரத தண்டவாளத்தின் மீது விழுந்திருக்கிறார்.
இதனைக் கண்ணுற்ற Mustafa Sözen னும் இன்னுமொரு இந்திய வம்சாவளி நபர் ஒருவரும் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் புகையிரத மேடையை விட்டு இறங்கி பாய்ந்து சென்று அந்த முதியவருக்கு ஆபத்து ஏதும் ஏற்படா வண்ணம் மீட்டு புகையிரத மேடையில் ஏற்றி விட்டனர். அதனைத் தொடர்ந்து இந்திய வம்சாவளி நபரும் புகையிரத மேடையில் ஆபத்துக்கள் ஏதுமின்றி ஏறிக்கொண்டார். ஆனால் Mustafa Sözen னுக்கு தண்டவாளத்திலிருந்து புகையிரத மேடைக்கு ஏறிக்கொள்ளும் அவகாசத்தை மரணம் கொடுக்கவில்லை. அதற்கிடையில் புகையிரதம் ஒன்று வந்து இளைஞனின் உயிரைப் பறித்துவிட்டது. (இன்னா லில்லஹி வ இன்னா இலாஹி ரஜிஊன்)
Mustafa Sözen னின் மரணச் சடங்கில் என்றுமில்லாதவாறு பெருமளவிலான Hanau நகர மக்கள் கலந்து கொண்டிருந்தனர். தனது உயிரைக் கொடுத்து முதியவரின் உயிரைக் காத்த இளைஞனை, Hanau-Town Council, “Hero of Hanau” and “An Exemplary Citizen.” என்று குறிப்பிட்டிருக்கின்றது.
மேலும் முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.
உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment