சர்வதேச புத்தகக் கண்காட்சி செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அடுத்த மாதம் 21ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இதில் 430 காட்சிக்கூடங்கள் அடங்கும். இந்தியா, ஜப்பான், சீனா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, ஈரான் போன்ற நாடுகளின் காட்சிக் கூடங்களும் இதில் அமைக்கப்படவுள்ளன.
வெளிநாடுகளைச் சேர்ந்த 60 காட்சிக் கூடங்கள் இம்முறை கண்காட்சியில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.