கத்தர் காயல் நல மன்றம் சார்பில், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் & இக்ராஃ கல்விச் சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட – நகர பள்ளிகளுக்கிடையிலான 7ஆம் ஆண்டு வினாடி-வினா போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி தொடர்ந்து ஏழாவது ஆண்டாக முதலிடத்தை வென்றுள்ளது.
பங்கேற்ற மொத்த அணிகள்:
சென்ட்ரல் மேனிலைப்பள்ளியிலிருந்து 17 அணிகளும்,
எல்.கே.மேனிலைப்பள்ளியிலிருந்து 50 அணிகளும்,
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 31 அணிகளும்,
அரசு மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 42 அணிகளும்,
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 58 அணிகளும்,
சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 18 அணிகளும்,
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 90 அணிகளும்
என – காயல்பட்டினத்தின் 7 மேனிலைப் பள்ளிகளிலிருந்து, அணிக்கு 2 பேர் வீதம் 306 அணிகளில் 612 மாணவ-மாணவியர் இப்போட்டியில் பங்கேற்றனர்.