அமெரிக்காவின் California மாநிலத்தின் தலைநகர் Sacramento ஆகும். இந்த Sacramento இல் இருந்து 58 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள Lodi என்ற இடத்தில் உள்ள முஸ்லிம்களைப் பற்றி இக் கட்டுரை பேச முனைந்தாலும், அது சொல்ல வரும் செய்தி முழு உலகத்திக்குமுரியதாகும் – குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்குரியதாகும்.
சமூக மட்டத்திலான இஸ்லாமிய தலைமைகள் தமது செயற்பாடுகளை மஸ்ஜித்களோடு வணக்கம் என்ற வரையறைக்குள் மாத்திரம்தான் வைத்திருத்தல் வேண்டுமா?
இஸ்லாமிய வளர்ச்சியில் பெருமானார் ரஸூலுல்லாஹ்(ஸல்) அவர்களின் காலத்திலிருந்து மஸ்ஜித்கள் வணக்கத்தை மாத்திரம்தான் மட்டுப்பாடாக கொண்டிருக்கவில்லை என்பதில், சமீப காலங்களில் எந்த இடத்தில் துண்டிப்புகள் இடம்பெற்றுள்ளது? அது ஏன்? என்பது போன்ற பல கேள்விகளை தொடுக்க விளையும் புள்ளியாக Lodi முஸ்லிம்களின் செயற்பாடு அமைந்துள்ளமையை முஸ்லிம் சமூகத்தின் மஸ்ஜித் நிருவாகிகள் தொட்டு அனைவரும் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
Lodi முஸ்லிம்கள் செய்துவிட்ட சாதனைதான் என்ன? ஒன்றல்ல இரண்டல்ல 16 வருடங்களாக மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமைதோறும் பசித்தோருக்கும் ஏழைகளுக்கும் உணவளித்து வருகின்றார்கள். “முழு சமூகத்திற்கும் உதவுகின்ற அதேவேளை தமது உண்மையான சமய தார்ப்பரியத்தையும் நிலைநாட்டுகின்றார்கள்.” என்று உள்ளூர் செய்தி நிறுவனங்கள் இச் செய்கையினை படம்பிடித்துக் காட்டியுள்ளன.
“இந்தச் சமூகத்தின் உறுப்பினர் என்ற வகையில் இம் மக்களுக்கு உதவவேண்டியது எமது பொறுப்பாகும். ஏனெனில் நாம் அனைவரும் Lodi யின் பிரஜைகளாவோம்.” என்று Lodi California Islamic Center Mosque இன் தலைவர் Taj Khan குறிப்பிட்டார்.
16 வருடங்களுக்கு முன்னர் இவ் இலவச உணவுத் திட்டத்திற்கான யோசனை Taj Khan அவர்களினாலேயே முன்வைக்கப்பட்டது. அது ஏனைய அங்கத்தவர்களால் எதிர்ப்புக்கள் அன்றி ஏற்றுக்கொள்ளப்பட்டு தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
பாகிஸ்தான் சுவையூட்டிகள் கொண்டு அமெரிக்க சம்பிரதாய முறைப்படி இவ் உணவுகள் தயாரிக்கப்படுகின்றது. உணவுத் தட்டில் பிரதான சாதம் உட்பட 5, 6 பொருட்கள் அடங்கியிருக்கும். “நாங்கள் உண்பது போன்று ஹலால் உணவையே அவர்களுக்கும் கொடுக்கின்றோம்.” என்று Lodi California Islamic Center Mosque’s Janazah Committee இன் பணிப்பாளர் Ehtesham Qamar மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
வரிசையில் நின்று உணவு Tray யை கையில் வாங்கியவுடன் நன்றியுணர்வினை வெளிப்படுத்துகின்றனர். இன உணர்வையும் மிகைத்த நெகிழ்ந்து போகக்கூடிய தருணம் அது.
“இளைய அமெரிக்க முஸ்லிம் பரம்பரையினரிடம் நாம் நல்லதொரு முன்னுதாரணத்தை விட்டுச் செல்கின்றோம். இந் நடவடிக்கையில் 6 வயது சிறுவர்கள் உட்பட இளையோரும் இணைந்து எம்முடன் பணியாற்றுகின்றனர்.” என்று Taj Khan அவர்கள் குறிப்பிட்டார்கள்.
“தானதர்மமும் ஸகாத்தும் (ஸகாத் – ஏழைகளுக்கு பணம்படைத்தவர்களால் கட்டாயம் கொடுக்க வேண்டிய ஒதுக்கீடு) எமது நம்பிக்கையின் பகுதியாகும். இவைகள்தான் எம்மை இச் செயற்பாட்டின் பால் நகர்த்திச் செல்கின்றன. இங்கு மறைத்துச் செயற்படுவதற்கு புறம்பான நிகழ்ச்சி நிரல்கள் எதுவும் எம்மிடத்தில் இல்லை. எங்களைச் சுற்றியுள்ளவர்களின் நன்மைக்காகவே நாம் இதனைச் செய்கின்றோம். நாம் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள்.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அமெரிக்காவில் California மாநிலத்தில்தான் அதிக முஸ்லிம்கள் வாழ்கின்றனர். 2014 ஆம் ஆண்டின் சனொத்தொகை புள்ளிவிபரங்களின் படி California வில் 1%ஐ நெருங்கிய அளவில் முஸ்லிம்கள் உள்ளனர்.
“உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனையோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை” (என்று அவர்கள் கூறுவர்). 76:09
மேலும் இதுபோன்ற முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள். உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் நிகழ்வுமேடையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment