இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையில் சிவில் விமானப் போக்குவரத்துக்கு தனது வான்பரப்பை வழங்கவில்லை என சவூதியின் சிவில் போக்குவரத்து அதிகாரசபை அண்மையில் ஒரு மறுப்பறிக்கையை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலுக்கு இந்தியாவில் இருந்து நேரடியாக சிவில் விமான சேவையை சவூதி வான்பரப்பின் ஊடாக ஆரம்பிக்க இருப்பதாக Air India நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்தே, சவூதியின் இந்த மறுப்பறிக்கை வெளியாகியுள்ளது.
Air Indai வின் அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், வாராந்தம் 3 விமானங்களை இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையில் போக்குவரத்தில் ஈடுபடுத்த எதிர்பார்ப்பதாகவும், இதற்காக வேண்டி சவூதியின் வான்பரப்பைப் பயன்படுத்த, சவூதியின் அனுமதியை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாகவும், குறிப்பிட்டார்.
தற்போது வாரத்திற்கு 4 விமானங்களை இஸ்ரேல், எத்தியோப்பியா (Touch Flight) ஊடாக இந்தியாவுக்கு பயணத்தில் ஈடுபடுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.