28.09.2016 அன்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஊடகத்துறையினருடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதி ஒபாமா ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில்களை வழங்கிக் கொண்டிருந்தார்.
அதில் CNN நிறுவனத்தின் பெண் ஊடகவியலாளர், ஜனாதிபதி ஒபாமாவிடம் முன்வைத்த கேள்வி இவ்வாறு அமைந்திருந்தது.
“நீங்கள் ‘இஸ்லாமிய தீவிரவாதம்’ என்ற பதத்தினை பயன்படுத்த மறுப்பதன் காரணம் என்ன ?!” என்று வினாவினைத் தொடுத்தார்.
அதற்கு அமெரிக்க ஜனாதிபதியின் பதில்கள் இவ்வாறு அமைந்திருந்தன.
அமெரிக்கா உட்பட உலகெங்கும் பில்லியன் கணக்கான முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். பில்லியன் கணக்கில் வாழும் உலக வாழ் முஸ்லிம்கள் அமைதியையே விரும்புகின்றனர்.
அமெரிக்காவின் உருவாக்கத்தில் முஸ்லிம்களின் பங்கு உள்ளது. ராணுவத் துறை, காவல்துறை, தீயனைப்புத்துறை போன்ற அரசின் முக்கிய துறைகளில் முஸ்லிம்கள் இணைந்து பெரும் பங்களிப்பு அளித்து வருகின்றனர்.
நமது அண்டைவீட்டுக்காரர்களாகவும் முஸ்லிம்கள் இருந்து வருகின்றனர். அவர்களை எவ்வாறு தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்த முடியும் ?
கிறிஸ்தவக் குழுக்கள் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டால், அவர்களை கிறிஸ்தவ தீவிரவாதம் என்று அழைப்போமா ?
தீவிரவாதிகளை மதத்துடன் தொடர்புபடுத்தக் கூடாது.
கோடிக்கணக்கில் வாழும் உலகில் வாழும் முஸ்லிம்கள் அமைதியை விரும்பக் கூடியவர்கள். அவர்களை ஒருபோதும் தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தக் கூடாது என்று ஒபாமா பதிலளித்தார்.
இதேவேளை, குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டர்ம் தனது டுவிட்டர் பதிவில் ஜனாதிபதி ஒபாமா ‘இஸ்லாமிய தீவிரவாதம்’ என்ற பதத்தினை பயன்படுத்தாவிடின் தனது பதவியினை இராஜினாமா செய்ய வேண்டும் என பதிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.