24 வயதையுடைய நாஸிப் அப்துல்லாஹ் என்ற ரஷ்ய இளைஞர், தனது ஹஜ் கிரியையை பைசிக்கள் மூலம் நிறைவேற்ற வேண்டுமென்ற அவாவை இவ்வருடம் நிறைவேற்றியுள்ளார்.
இவ் வருடம் ஜூன் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பித்த இவரது பயணம், 3 மாதங்களைக் கடந்து (6600 km) இனிதே நிறைவடைந்திருந்தது.
சவூதியின் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சின் செயலாளர் அவர்கள் மதீனாவில் வைத்து நாஸிப் அப்துல்லாவை வரவேற்றார்.
அப்துல்லாஹ்வுக்கு முன்னர் சைனாவைச் சேர்ந்த ஒருவரும் பைசிக்கள் மூலம் 8150 km தூரத்தைக் கடந்து ஹஜ் கடமையை இவ்வருடம் நிறைவு செய்திருந்தார்.
2012 ஆம் ஆண்டு வொஸ்னியாவைச் சேர்ந்த ஸினாட் ஹட்சிக் என்பவர் கால் நடையாக ஹஜ் கிரியையை நிறைவு செய்திருந்தார். இவர் கடந்து வந்த பாதை 5900 km களாகும்.
2014 ஆம் ஆண்டு மலேசியாவைச் சேர்ந்த குழுவொன்று, பைசிக்கள் மூலம் மதீனாவைச் சென்றடைந்திருந்தது.