உலகின் ஒட்டுமொத்த பார்வையையும் ரியோ நகர் தம் வசம் குவிய வைத்திருக்கின்றது. 2016 – ஒலிம்பிக், உலக விழாக்களில் ஒன்று. இத்தகைய முழு உலகும் அவதானித்துக் கொண்டிருக்கும் இடத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த இஃப்திஹாஜ் முஹம்மது எனும் வீராங்கனை உலக தரவரிசை வீராங்கனைகளை பின் தள்ளி முன்னணியில் திகழ்ந்து வருகின்றார். அதிலும் விசேடம் என்னவென்றால், அமெரிக்க ஒலிம்பிக் வரலாற்றில் ஹிஜாப் அணிந்து பங்கு பெறும் முஸ்லிம் பெண்ணாக இஃப்திஹாஜ் முஹம்மது திகழ்கின்றார். இவரின் திறமைகளை, அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி உட்பட பல பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.