23 வயதையுடைய அமல் சம்சூத், ஹிஜாப் அணிந்த முதல் பெண் பொலீஸ் அதிகாரியாக அமெரிக்காவில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் லெபனான் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பிரஜையாவார்.
ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பொலீஸ் அதிகாரி என்ற காரணத்தினால், சமூக ஊடகங்களில் தற்போது பரவலாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.
ஊடகம் ஒன்றுக்கான நேர்காணலின்போது, “எல்லோரையும் போல் தானும் ஒரு சாதாரண அதிகாரி; எங்களுக்கிடையில் எவ்வித வேறுபாடும் கிடையாது.” என்று அமல் சம்சூத் பதிலளித்துள்ளார்.
அமலைப் பற்றி அவரது மேலதிகாரி குறிப்பிடுகையில், “அமல் தகைமைகள் நிறைந்த பொலீஸ் அதிகாரி. அவர் தன்நம்பிக்கை நிறைந்தவர். அவரிடம் இருந்து ஏனைய அதிகாரிகள் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமல் சம்சூத் குற்றவியல் நீதித் துறையில் முதுகலைப் பட்டம் (MA) பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.