கேரளாவைச் சேர்ந்த 23 வயது நிரம்பிய Majiziya Bhanu, Kerala-Kochi யில் நடைபெற்ற மாநில பெண்கள் மட்ட Bodybuilder போட்டியில், இவ் ஆண்டின் முற்பகுதியில் போட்டியிட்டிருந்தார். இப் போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றிய அவரை எவரும் பார்க்காமல் இருக்கத் தவறவில்லை. ஹிஜாப் அணிந்த நிலையில் ஒரு பெண் போட்டியாளர் Bodybuilder போட்டியில் பங்குபற்றியமை அனைவருக்கும் ஒரு புதுமையான அனுபவமாகவே இருந்தது. அது மாத்திரமன்றி ஹிஜாப் என்பது பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் ஒரு தடை அல்ல என்பதையும் Majiziya Bhanu நிரூபித்திருக்கிறார். ஹிஜாப் என்பது பெண்ணுக்கு இடைஞ்சலான ஒன்றல்ல என்பது Majiziya Bhanu வின் நம்பிக்கையாகும்.
போட்டி நிகழ்ச்சிகளின்போது, தன்னைப் பற்றி “ஹிஜாப் அணிந்த முஸ்லிம் போட்டியாளர்” என்று வர்ணனையாளர்கள் அறிவிப்புச் செய்யும் போது, தான் பெருமை அடைந்ததாக Majiziya Bhanu குறிப்பிடுகின்றார். “ஹிஜாப் என்பது எனது அடையாளம். அது ஒரு போதும் என்னை மட்டுப்படுத்துவதில்லை. அது எனக்கு கண்ணியத்தையும், வலிமையையும் சேர்க்கின்றது” என்று Majiziya Bhanu குறிப்பிடுகின்றார்.
Majiziya Bhanu இரண்டாம் வருட பல்மருத்துவ மாணவியாவார். இவ்வாறு கல்வி கற்றுக்கொண்டிருக்கும் நிலையிலேயே Bodybuilder துறையிலும் தன்னை ஈடுபடுத்தி வருகின்றார். இவர் 3 முறைகள் ‘Strongest Woman’ ஆக Kerala State Power Lifting Association இனால் தேர்வாகியிருக்கிறார்.
இரண்டு வருடகாலமாக தனது கல்வி நடவடிக்கைகளை தொடரும் நிலையிலேயே, Power Lifting and Arm-Wrestling போட்டியில் மாநில மட்டத்தையும் தாண்டி, தேசிய மட்டத்தில் பதக்கங்களை வென்றெடுத்திருக்கின்றார். இதே சமகாலத்திலேயே பல்மருத்துவ பயிற்சியினையும் தொடர்ந்துகொண்டிருக்கின்றார். குறிப்பிட்டுக் கூறவேண்டிய விடயம் யாதெனில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஹிஜாப்பை அவர் கைவிட்டதில்லை என்பதேயாகும்.
“ஆரம்ப நாட்களில் பல்மருத்துவம் மற்றும் Bodybuilder துறைகளில் தான் ஹிஜாப்புடன் கலந்துகொள்ளும் போதெல்லாம் ஏனையோர் என்னை உறுத்தலாகவே நோக்கினர். ஆனால் பின்னர் எனது பணிகளில் ஹிஜாப் அணிவதில் உள்ள எனது ஈடுபாட்டை அவர்கள் உணர்ந்து கொண்டனர்.” என்று Majiziya Bhanu குறிப்பிடுகின்றார்.
Majiziya Bhanu விளையாட்டுக்களில் அதிக ஆர்வம் கொண்டவர். அவரது கிராமத்தைப் பொறுத்தவரையில் விளையாட்டுக்கான வசதிகள் எதுவும் இல்லாத நிலையே காணப்படுகின்றது. இத்தகைய நிலையில் அவர் தனது ஆர்வத்துக்கு முட்டுக்கட்டையேதும் போடவில்லை. நாளாந்தம் அவரது பல்மருத்துவ பயிற்சி மற்றும் வகுப்புக்களை முடித்த பின்னர், 60 km தூரத்தில் அமைந்துள்ள Kozhikode உள்ள Gym Centre க்கு புகையிரதம் மூலம் பயணம் சென்று வருகின்றார்.
“வழக்கமாக நான் வீடுதிரும்பும் போது இரவு 9 மணியாகிவிடும். எனது எதிர்பார்ப்பு, இலக்குகளை அடைந்து கொள்வதற்காக இவற்றை நான் எனது நடைமுறையாக்கிக் கொண்டேன்.” என்று இறுதி ஆண்டு பல்மருத்துவ மாணவியான Majiziya Bhanu தெரிவிக்கின்றார்.
எனக்கு எனது பெற்றோர் மிகவும் துணையாக இருக்கின்றனர். அவர்ளின் ஆதரவு இந்த அளவுக்கு இல்லையெனில், என்னால் எனது இலக்குகளை இந்தளவுக்கு எய்த முடியாமல் இருந்திருக்கும். “சமய விழுமியங்களால் வார்க்கப்பட்டது எமது குடும்பமும் கிராமமும், அந்த வகையில் சமய விழுமியங்களை அனுசரித்தே எனது Bodybuilding துறையிலும் நான் செயற்பட்டு வாருகின்றேன்.” என Majiziya Bhanu குறிப்பிடுகின்றார்.
இன்று Majiziya Bhanu அவரது கிராமத்தில் உள்ள ஏனைய பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமுள்ள ஒருவராகத் திகழ்கின்றார். அவரது திறமைகள் வெளிக்காட்டப்பட்ட பின்னர் Majiziya Bhanu வின் கிராமத்திலும் தற்போது ஒரு Gym Center நிறுவப்பட்டுள்ளது. இங்கு ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கையே கூடுதலாக உள்ளது.
“அதிகமான இளம் மற்றும் நடுத்தர வயதுடைய பெண்கள் தற்போது என்னை நாடிவந்து, Bodybuilding தொடர்பாக ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்கின்றனர். அவர்களது இயல்புக்கேற்ற வகையில் நான் உதவிவருகின்றேன். அத்தோடு எமது ஊரில் Gym Center அமையப்பெற்றுள்ளதால், தான் தற்போது மாதத்தில் 3 அல்லது 4 முறையே Kozhikode சென்று வருகின்றேன்.” என்று Majiziya Bhanu கூறுகின்றார்.
தற்போது Bhanu, படுபயங்கர ஓய்வில்லாத நிலையில் காணப்படுகின்றார். அடுத்த மாதத்தில் துருக்கியில் நடைபெறவுள்ள, World Arm Wrestling Championship 2018 ல் கலந்துகொள்ள தன்னைத் தயார்படுத்தி வருகின்றார்.
தற்போது நான் எனது பயணத்திற்காக, அதிகம் பணத்தேவை உடையவளாக உள்ளேன். இறுதியில் சிலரை நாடி பயணத்திற்கான அனுசரனையைப் பெற்றுள்ளேன். நான் முஸ்லிம் என்ற காரணத்திற்காக நான் வேண்டுகோள் முன்வைத்த நிறுவனங்கள் சில எனக்கு உதவ முன்வரவில்லை என Majiziya Bhanu ஆதங்கப்படுகின்றார்.
அவரது பிரதான இலக்காக இருப்பது மருத்துவத் துறையாகும். அவரது பெற்றோரின் கனவும்கூட அதுவாகத்தான் இருக்கின்றது. முதலில் எனது மருத்துவ துறைக் கற்கையை நிறைவுசெய்வதே எனது பிரதான இலக்காகும். அதன் பின்னர் Bodybuilding துறையில் பூரண ஈடுபாட்டைக் காட்டமுடியும் என Majiziya Bhanu குறிப்பிடுகின்றார்.
Majiziya Bhanu பெற்றுக்கொண்டு முக்கிய பதக்கங்கள்:
• Silver medal in ‘Asian Powerlifting Championship 2017’
• Gold Medal in ‘Mr Kerala 2018’ competition in women category
மேலும் முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.
உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment