பிரித்தானியாவில் உள்ள முஸ்லிம்கள் தற்போது முதற் தடவையாக London BBC மூலம் முஸ்லிம் நிகழ்ச்சிகளை கேட்டு பயனடைந்து வருகின்றனர்.
வாரம்தோறும் இமாம்கள் அதிகாலை 05:50 முதல் London BBC இன் 14 உள்நாட்டு வானொலிகள் மூலம் முஸ்லிம் நிகழ்ச்சிகளை நடாத்துகின்றனர். அல்குஆன் வசனங்கள், விளக்கங்கள், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் விளக்கங்களையும் மற்றும் பல இஸ்லாமிய நிகழ்ச்சிகளையும் இமாம்கள் வழங்கி வருகின்றனர்.
Leeds, Sheffield, Lancashire, Manchester, West Midlands, Leicester, Stoke, Derby, Nottingham, Coventry Warwickshire – Merseyside, Berkshire, London ஆகிய பகுதிகளில் இருந்து இந் நிகழ்ச்சிகளை மக்கள் கேட்டு மகிழ்கின்றனர்.
“உள்ளூர் வானொலி என்பது சமூகங்களை இணைப்பதாகும். இந்த வாரந்த நிகழ்ச்சிகள் முஸ்லிம் சமூகம் தனிமைப்படுத்தலில் இருக்கும்போது, தமது சமூக, சமய பெறுமானங்களை உணர்ந்துகொள்வதற்கும் மீட்டிக்கொள்வதற்கும் உதவும் என்று நாங்கள் நம்புகின்றோம்.” என்று BBC இன் உள்நாட்டு வானொலிகளின் தலைமை அதிகாரி Chris Burns குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வழிகளில் ஒன்றாக பிரித்தானியாவில் உள்ள வழிபாட்டுத் தளங்கள் அனைத்தும் மார்ச் மாதம் 23 ஆம் திகதியில் இருந்து மூடப்பட்டுள்ளன. BBC வானொலியானது ஏற்கனவே 39 உள்ளூர் நிலையங்கள் ஊடாக கிறிஸ்தவ நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு வணக்கஸ்தளங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் காலம் வரை இந்த சேவை தொடரும் என BBC குறிப்பிட்டுள்ளது.
COVID-19 வைரஸ் தொற்றுக் காலத்தில் பல்வேறு சமூகங்கள் நடந்துகொண்ட விதங்களை பிரிட்டிஷ் எலிசபெத் மகாராணி பாராட்டிப் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.